எதிர்நீச்சல் புது வில்லன் கிருஷ்ணா யார் தெரியுமா? விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் என்று வில்லன் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் யார் என்பது பற்றி இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வரும் நிலையில் அவர் பெயர் ஆர்ஜே நெலு என்பது தான்.
இந்த நிலையில் அவர் பற்றிய விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த வகையில் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். இதில் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா தமிழில் புது முகமாக இருந்தாலும் அவரும் தற்போது ரசிகர்களின் மத்தியில் பதிந்திருக்கிறார்.
அதுபோல இந்த சீரியலில் அதிகமான நடிகர்கள் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரீட்சைமானவர்கள் தான். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் ஆதி குணசேகராக வாழ்ந்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார். அதற்கு பிறகு சீரியலிலும் பல அதிரடியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் சக்தி மற்றும் ஜனனிக்கு பிரச்சனையை கொடுக்கும் விதமாக புது வில்லன் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அவர் அறிமுகமான முதல் நாளே அவருக்கு ஆதி குனசேகரனுக்கு கொடுக்கப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் முதல் நாளே தன்னுடைய மிரட்டல் ஆன நடிப்பையும் காட்டி இருந்தார். நெற்றியில் திருநீறு, வெள்ளை வேஷ்டி சட்டை, தோளில் ஒரு பேக் என பவ்யமாக இருந்தாலும் பேச்சில் தான் ஒரு வில்லன் என்பதை முதல் நாளே மிரட்டி இருக்கிறார்.
அதுவும் சக்தி மற்றும் ஜனனியிடம் தன்னை கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் (கிருஷ்ணா) என்று அறிமுகம் செய்யும் விதம் அருமையாக இருந்தது. இந்த நிலையில் அவர் யார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிகராகவும், இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் வளம் வரும் ஆர்ஜே நெலு தான். இவர் இலங்கை மட்டக்களப்பு பகுதியை சார்ந்தவராம்.
இலங்கையில் உள்ள சக்தி டிவியில் முதல்முறையாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஜிபிஎஸ், கடலாய் காதல் என்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு தற்போது சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் மூலமாக கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் கிருஷ்ணாவாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஏற்கனவே கதைப்படி இப்போது கோவில் திருவிழாவில் ஜீவானந்தத்தை போட்டு தள்ள கதிர் தரப்பினர் பிளான் போட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜீவானந்தத்திற்கு கதிரும் குணசேகரனும் தான் தன்னுடைய மனைவியை கொலை செய்தது என்ற உண்மை தெரிந்திருக்கும் நிலையில் இனி கோவில் திருவிழாவில் என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் ஜனனிக்கு முட்டுக்கட்டையாக இப்போது வந்திருக்கும் ஆர்ஜே நெலு ( கிருஷ்ணா) சீரியலில் இனி என்ன மாதிரி தொடர போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இவரே இனி ஜனனிக்கு உதவி செய்வாரா? அல்லது ஜீவானந்தத்தால் கதிருக்கு பிரச்சனை ஏற்பட்டு அவர் வீட்டில் முடங்கிய பிறகு கம்பெனி விஷயத்தில் ஜனனிக்கு எதிராகத்தான் இவர் இருப்பாரா? என்பது இனி தான் தெரிய வரும்.

ஆனாலும் ஆர்ஜே நெலுவிற்கு ஒன்இந்தியா தமிழ் சார்பாகவும் வாழ்த்துக்கள்.. அதே நேரத்தில் முதல் நாளில் அவருடைய நடிப்பு உங்களுக்கு எவ்வளவு பிடித்திருந்தது என்பதை கமெண்டில் தட்டி விடுங்கள்.












Click it and Unblock the Notifications