Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தக் லைஃப் படத்தில் நடிக்கிறேன்! கமல் என்னை பார்த்து முறைச்சாரு! எதிர்நீச்சல் வில்லன் உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி நேற்றோடு முடிவடைந்த "எதிர்நீச்சல் சீரியலில்" "வீர சங்கிலி" என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகர் "மணி சத்யன்" பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் டீக்கடை வைத்திருந்த மணி சத்யன் இப்போது கமல் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் "தக் லைஃப்" திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறி இருக்கிறார்.

என்னதான் திறமை இருந்தாலும் எல்லோராலும் நினைத்த நேரத்தில் வெற்றி பெற்று விட முடியாது, என்பதற்கு பலரை சான்றாக சொல்லலாம். ஒரு சிலர் சின்ன வயதில் இருந்தே தன்னுடைய திறமையால் ஜெயித்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. அந்த மாதிரி தான் எதிர்நீச்சல் சீரியலில் வீர சங்கிலி கேரக்டரில் நடித்த நடிகர் மணி சத்யம் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

Television ethirneechal Serial Kamal Haasan Entertainment

எதிர்நீச்சல் சீரியல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் தர்ஷினியை கடத்தி வைத்த வீர சங்கிலியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து இருக்க முடியாது. வீர சங்கிலி தான் குதிரை என்ற ரவுடி இடம் சொல்லி தர்ஷினியை கடத்தி இருப்பார். பிறகு குதிரையிடம் இருந்து தர்ஷினி தப்பித்த போது வீர சங்கிலி இடம் மாட்டி இருப்பார். ஒரு சில மாதங்கள் இந்த சீரியலில் நடித்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கோர்ட்டில் குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்லும் காட்சிகள் இருந்தது.

அதோடு இந்த சீரியலும் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மணி சத்யன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் மணி சத்யன் பேசுகையில் என்னுடைய அப்பா டீக்கடை வைத்திருந்தார். அதே டீக்கடையில் தான் நானும் இத்தனை வருஷங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் நடிக்க வேண்டும் என்று அதற்காக முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு எதிர்நீச்சல் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இப்போது கமல் சார் படத்தில் நான் நடித்து இருக்கிறேன். கமல் சார் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன். பெரிய கேரக்டர் கிடையாது. ஒரு சீன் தான் வருவேன். ஆனால் அதுவும் எனக்கு பெரிய விஷயம் தான்.

மணிரத்தினம் படத்தில் நடிப்பது என்றால் சும்மாவா? அதுவும் கமல்ஹாசனோடு நடிக்கிறேன்.. நான் சூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கும் போது கமல்ஹாசன் அங்கிருந்து என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் பெரியதாக இருந்தால் அவர் பார்ப்பது எனக்கு முறைத்த மாதிரியே தெரிந்தது. அதனாலேயே முதலில் சில டேக்குகள் வாங்கினேன்.

அப்போது பார்ப்பதற்கு பயங்கரமாய் இருக்கிற, நீ ஏன் சொதப்புற என்று மணிரத்தினம் கேட்டதால் பிறகு என்னுடைய காட்சிகளை நான் உடனே நடித்து முடித்து விட்டேன். என்னுடைய டீக்கடைக்கு வருகிறவர்கள் பலரும் நீங்க எதிர்நீச்சல் சீரியலில் நடித்தவங்க தானே? என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல இதோடு விட்டு விடாதீர்கள் இன்னமும் பல சீரியல்கள் சினிமாவில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி சிலர் சூட்டிங்கிற்க்கு கூட்டிட்டு போய்விட்டு காலையில் இருந்து மாலை வரை அங்கே காத்திருக்க வைத்துவிட்டு நாளைக்கு வாங்க என்று அனுப்பி வைத்து விடுவார்கள். அப்படி எல்லாம் அவமானப்பட்டு இருக்கிறேன். இப்போது எனக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று மணி சத்யம் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+