நடிகர் மாரிமுத்து பேசிய கடைசி வீடியோவை பகிர்ந்த எதிர்நீச்சல் பிரபலம்.. கண்கலங்க வைத்த வார்த்தை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை மோனிஷா விஜய் நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு தன்னைப் பற்றி பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த போது அவருக்கு மகளாக நடித்த மோனிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய வீடியோவை மோனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் மாரிமுத்து இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மோனிஷாவின் பிறந்தநாள் வருவதற்கு முன்பே அவருக்காக மாரிமுத்து வீடியோ அனுப்பி இருப்பதாக மோனிஷா கூறியிருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்த நடிகர் மாரிமுத்து சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார். அவருடைய இறப்பிற்கு பிறகும் அவரை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வருகின்றனர்.
ரசிகர்களே அப்படி என்றால் அவருடைய குடும்பத்தினரும் அவரோடு சீரியலில் ஒன்றாக நடித்தவர்களையும் சொல்லவா வேண்டும். மாரிமுத்து குறித்து அவரோடு சீரியலில் நடித்த நடிகர்கள் கூறுகையில் மாரிமுத்து சீரியலில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் ஒரு குழந்தைத்தனமாகத்தான் சக நடிகர்களோடு பேசி பழகி இருக்கிறார்.
அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் அவருடன் நடிக்கும் குழந்தைகளிடம் சீரியலில் கடுமையாக நடந்து கொள்ளும் மாரி முத்து நிஜத்தில் நண்பர்களைப் போல பேசி பழகி வந்ததாக பல பேட்டிகளில் ஏற்கனவே எதிர்நீச்சல் நடிகர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்த சில மாதங்களுக்கு பிறகு இன்று அவருக்கு மகளாக நடித்த நடிகை மோனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாரிமுத்து தனக்காக சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளுக்கு என்று அனுப்பிய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் மாரிமுத்து பேசுகையில் என்னால் உன்னுடைய பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை மோனிஷா. அதனாலதான் இந்த வீடியோ அனுப்புறேன். மோனிஷா, நீ எனக்கு சீரியலில் மகளாக நடித்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் நான் நிஜத்தில் நீ எனக்கு மகளாக பிறக்கவில்லையே என்று பல நாட்கள் நினைத்து இருக்கிறேன். ஒரு விதத்தில் பொறாமைப்பட்டேன் என்றும் கூட சொல்லலாம்.
ஏனென்றால் உனக்கு அவ்வளவு திறமை இருக்கிறது. நீ நன்றாக படிக்கக்கூடிய பொண்ணு. விளையாட்டிலும் வேற லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிற. உனக்கு எத்தனை கலைகள் தெரியும் என்று நீ ஒவ்வொரு நாளும் சொல்லும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. நீயும் உன்னுடைய அக்கா வர்ஷாவும், எத்தனையோ விளையாட்டுகளில் கலந்து கொள்ளுறீங்க. எல்லா திறமையும் உள்ள முழு நிறைவான ஒரு பெண்ணா நான் உன்னை பார்க்கிறேன்.
உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய அளவில் வரவேண்டும். பிடி உஷா கல்பனா சாவ்லா மாதிரியே இந்தியாவிலிருந்து எத்தனையோ பெண்கள் சாதித்து இருக்காங்க. அந்த மாதிரி நீயும் சாதிக்கப் போற என்று எனக்கு தெரியும். அது நீ நடிகையா சாதிக்க போறியா? இல்ல விளையாட்டு வீராங்கனையா சாதிக்க போறியா? இல்ல அதை தாண்டி மூன்றாவதாக வேற ஏதாவது திறமையில் சாதிக்க போறியா என்று எனக்கு தெரியல.
மோனிஷா நீ ஆல் இந்தியா லெவலில் பல பதக்கங்களை பெற்றிருக்க. இன்னும் அதிகமாக நீ வெற்றி பெறுவ. அதுவும் சமீப காலமாக ஆறு ஏழு எபிசோடுகளாக எதிர்நீச்சல் சீரியலில் பின்னி பெடல் எடுத்துட்ட. அது விஷயமாக உன்கிட்ட பேசி இருக்கிறேன். வாழ்த்துக்கள் மோனிஷா என்று மறைந்த நடிகர் மாரிமுத்து அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மோனிஷா இந்த ஆசிர்வாதம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும். தற்செயலா சில மாதங்களுக்கு முன்பு என் சகோதரியின் பிறந்தநாளுக்கு மாரிமுத்து சார் அக்காவுக்கு பதிலாக எனக்கு வாழ்த்தினார். மேலும் எனது வரவிருக்கும் பிறந்தநாளுக்கு இந்த வீடியோவை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
அவர் இந்த உலகத்தை விட்டு பிரியும் முன் என்னை எப்படி வாழ்த்தினார் என்று எனக்கே தெரியவில்லை. அவரது ஆன்மா சொர்கத்தில் இருந்து என்னை ஆசீர்வதிக்கும் என்று நம்புகிறேன் என்று உருக்கமாக மோனிஷா பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு அதிகமானோர் தங்களுடைய வருத்தங்களையும் மோனிஷாவிற்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
-
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications