மருத்துவமனையில் குணசேகரன்.. நந்தினி மற்றும் ரேணுகா செய்த எதிர்பார்க்காத செயல்.. இவங்களா இப்படி?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் நெஞ்சு வலியில் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.
அவருக்கு ஒரு பக்கமாக கால் மற்றும் கை செயலிழந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் ரேணுகாவும் நந்தினியும் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். இது குறித்து சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் இவர்களுடைய நடிப்பு பற்றியும் அதிகமான ரசிகர்கள் விவாதித்து கொண்டிருக்கின்றனர். சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த சீரியல் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் சீரியலில் தான் இந்த நடிகர்கள் ரொம்ப சீரியஸாக நடித்துக் கொண்டிருந்தாலும் சூட்டிங் இல்லாத நேரத்தில் ரீல்ஸ் வீடியோக்களை instagram பக்கத்தில் அலற விட்டு வருகிறார்கள். ஆளாளுக்கு ஒரு பக்கம் டான்ஸ் ஆடிக் கொண்டும் dubsmash பண்ணிக் கொண்டும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சீரியலில் இவர்களுடைய நடிப்பை பார்த்து வியந்து போய் இருந்த ரசிகர்களுக்கு instagram-ல் இவர்களுடைய ரீல்ஸ் வீடியோ அவரா இவர்..? இவரா இப்படி எல்லாம் பண்ணுறது..? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் வகையில் தான் இவர்களுடைய பர்பாமென்ஸ் இருந்து வருகிறது. சீரியலில் சீரியஸாக பார்க்கும் நடிகர்கள் கூட ரீல்ஸில் காமெடி பண்ணி வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவருக்கு வலது பக்கம் கை மற்றும் கால் செயல் இழந்துவிட்டது என்று டாக்டர்கள் கூறியிருக்கின்றனர். அதே நேரத்தில் இது உண்மையானது தானா? அல்லது தன்னுடைய வீட்டு மருமகளை ஜீவானந்தத்திடம் சண்டைக்கு போக வைப்பதற்காக இப்படி நடிக்கிறாரா? என்று குழப்பமான கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் அதே நேரத்தில் வீட்டில் நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் "மாலை பொழுதில் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி" என்கிற பாடலுக்கு இருவரும் பரதநாட்டியத்தில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார்கள். இவர்களா இப்படி எல்லாம் என்று சொல்லும் வகையில் இருந்தாலும், நிஜத்தில் இவர்கள் இருவருமே நடனத்தில் கைதேர்ந்தவர்கள் என்பது இவர்களை பாலோ பண்ணுரவர்களுக்கு தெரிந்ததுதான்.

இந்த நிலையில் இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அதற்கு அதிகமான ரசிகர்கள் உங்களுக்கு குணசேகரன் ஹாஸ்பிடலில் இருப்பது சந்தோஷம்தான் என்று எங்களுக்கு தெரியும் ஆனால் அதுக்காக இப்படி எல்லாம் ஆட்டம் போட்டு கொண்டாடுவீங்களா..? என்று கேள்வி கேட்க, இன்னும் ஒரு சிலர் நீங்க போடும் ஆட்டத்தை குணசேகரன் வெளியே வந்து பார்த்தால் என்ன நடக்கும்னு தெரியுமா..? என்றும் மிரட்டியும் வருகிறார்கள். இப்படியாக இந்த வீடியோவுக்கு அதிகப்படியான கமெண்ட்களும் லைக்குக்களும் குவிகிறது.












Click it and Unblock the Notifications