எதிர்நீச்சல் “நந்தினி” கதறி அழுது வெளியிட்ட வீடியோ.. காரணம் இதுதானாம்..! குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகிறார்.
ஹரி பிரியா ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருந்தாலும் நந்தினி கேரக்டர் இவருக்கு வித்தியாசமான வரவேற்பை ரசிகர்களிடம் கொடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் ஹரிப்ரியா கதறி அழுது பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சிறியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் நந்தினி கேரக்டரில் நடிக்கும் நடிகை ஹரிப்பிரியாவும் ஒருவர். இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் சீரியலில் இசை கேரக்டரின் மூலமாக பலருக்கும் பரிட்சயமானவர்தான்.
கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பிறகு ஹரி பிரியாவிற்கு அடுத்தடுத்து சில சீரியல்களில் வாய்ப்பு வந்தது. ஆனாலும் பெரிய அளவில் அவர் பிரபலமாகவில்லை. அடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் நெகட்டிவ் கேரக்டராக இருந்தது. ஜீ தமிழில் நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளியான லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் ஆரம்பத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த ஹரிப்ரியா பிறகு பாசிட்டிவான கேரக்டராக மாறி இருந்தார்.
அதுபோல சன் டிவி சீரியல்களிலும் நெகட்டிவ் ஆகவே நடித்துக்கொண்டிருந்த நிலையில் இவர் உடைய நிஜ வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருந்து வந்திருக்கிறது. அப்போது நெகட்டிவ் ஆக நடிக்கும் போது அவருக்கு இருக்கும் அந்த டென்ஷன் இவருடைய உடல் நலத்தையே பாதித்து விடுமோ என்ற ஒரு பயமே தனக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் கூட ஹரிப்பிரியா பேசி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் காமெடி கேரக்டரில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதே நேரத்தில் வீட்டல் கணவர் தனக்கு மரியாதை கொடுக்காமல் நடத்தும் விதம் மற்றும் குணசேகரனின் ஆணாதிக்க திமிரு காரணமாக சில எபிசோடுகளாகவே குணசேகரன் உடன் நந்தினி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நந்தினி குணசேகரனை கதிருக்காக எதிர்த்து பேசி இருந்தார். அது பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் பேசும் டயலாக் எப்படி உணர்வுபூர்வமாக இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக தன்னுடைய டப்பிங் பேசும் வீடியோ ஒன்றை instagram பக்கத்தில் ஹரிப்பிரியா வெளியிட்டு இருக்கிறார். டப்பிங் பேசும்போது அவர் கதறி அழுது இருப்பது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications