எதிர்நீச்சல்: குணசேகரன் செய்த கொலை! தேவகி யாருன்னு தெரிஞ்சதும் ஜனனிக்கு வந்த TENSION! இன்றைய அப்டேட்!
சென்னை: (Ethirneechal serial today Episode) சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல்ல, இப்போ நடந்திருக்கிற ட்விஸ்ட் இருக்கு பாருங்க... சும்மா அடிச்சுத் தூக்குது! குணசேகரன் சின்ன வயசுல இருந்து பண்ணின அத்தனை அட்டூழியத்துக்கும் பின்னாடி, ஒரு MAJOR கொடூர பின்னணி இருக்குன்னு தெரிஞ்சதும் மொத்தக் குடும்பமும் ஆடிப்போயிட்டாங்க! தனுஷ்கோடிக்கு போன சக்திக்கு கிளம்புன ஆபத்தும், தேவகி யாருன்னு தெரிஞ்ச ரகசியமும் தான் இன்றைய எபிசோட்ல ஹைலைட்!

குணசேகரன் மிரட்டல்
சக்தி இராமேஸ்வரம் கிளம்பின விஷயம் குணசேகரனுக்குத் தெரிஞ்சு, வீட்ல எல்லாருக்கும் டென்ஷன் ஏத்துனான் பாருங்க செம டெரர்!. தம்பிகளுடன் வெளியில் இருந்த குணசேகரன், வீட்டுக்கு வந்ததும் நேராக ஜனனியிடம் வந்து, "இராமேஸ்வரம் போன உன் புருஷனை ஒழுங்கா கிளம்பி வரச் சொல்லு!"ன்னு ஆர்டர் போடுறான்.
ஜனனிக்கு அதிர்ச்சி
நந்தினி, "சக்தி அங்கலாம் போகலையே"ன்னு நடிச்சாலும், குணசேகரன், "அவன் எந்த மடத்துல தங்குனான்? யார் யாரை பார்த்தான்னு எல்லாம் எனக்கு தெரியும்!"ன்னு ஜனனியை போட்டுப் பொளந்துடுறான்! பயந்து போன ஜனனி, "இன்னும் எத்தனை பேரை உங்க சுயநலத்துக்காகக் கொல்லப் போறீங்க? சக்திக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, அவ்வளவு தான்!"ன்னு பதிலுக்கு சவால் விட்டு எஸ்கேப் ஆக ட்ரை பண்றா! நம்ம குணசேகரன் என்ன பண்ணுவான்? ஜனனியைப் பிடிச்சு தள்ளிவிட்டுட்டு, மாடிக்கு கிளம்பிடுறான்.
சக்தியை யாரோ குத்திட்டாங்க
சக்தியோட நம்பருக்குக் கால் போகாம, மொத்த வீடும் பீதியில் இருக்க... அங்க ராமேஸ்வரத்துல நம்ம சக்திக்கு MAJOR ஆக்ஷன் சீன்!. சக்தியைச் சுற்றி வளைச்ச ரவுடிக் கும்பல் கத்தியாலக் குத்திட்டுப் போறாங்க. ஆனா, கரெக்டா யாரோ இரண்டு பேர் வந்து, அந்த ரவுடிகள்ல ஒருத்தனை சுட்டுத் தள்ளிடுறாங்க!. சக்தியை யாருக் கொலை செய்ய வந்தது? இப்போ யாரு நம்மளைக் காப்பாத்தினாங்க?ன்னு எதுவுமே புரியாம குழம்பிப் போனாலும், எப்படியோத் தனுஷ்கோடிக்கு போறான். சக்திக்குத் துணைக்கு வந்த அந்த (MYSTERY) நபர் யாருன்னு தெரிஞ்சா, இந்த சீரியல் இன்னும் பல வருஷம் போகும்!
சாமியார் உடைத்த ரகசியம்
தனுஷ்கோடியில் ஒரு சாமியாரை சந்திச்ச சக்தி, ஒரு லெட்டரைக் காட்டி தேவகி பத்தித் தனக்குத் தெரியணும்னு கேட்கிறான். சக்திக்கு தெரியாம, ஜனனிக்கு கால் 'அட்டெண்ட்' ஆகிடுது! நந்தினி "என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம்!"னுச் சொல்ல, மொத்த பெண்களும் பதற்றத்துடன் சாமியார் பேசுவதை கேட்க ஆரம்பிக்கிறாங்க. "இது தேவகி எழுதுன லெட்டர். அந்த பொண்ணு நேபாளம். வேண்டுதலுக்காக இங்க வந்தப்போ, தேவகியோட அம்மா இறந்துட்டாங்க. அங்க இருந்த சொத்தையெல்லாம் வித்து, இங்க நிறையச் சொத்து வாங்குனாரு அவங்க அப்பா.
(Ethirneechal serial today Episode)
அந்த சமயத்துல குணசேகரன் அப்பா ஆதிமுத்து அவங்களுக்குத் துணையா இருந்தாரு. சொத்தைப் பார்த்துட்டு, 'தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைச்சு', தேவகியை அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு!. இந்த விஷயம் ஆதிமுத்துவின் தென்காசி குடும்பத்துக்குத் தெரிஞ்சதும், சொத்து போயிடுமோன்னு பயந்து, குணசேகரன் இராமேஸ்வரம் வந்து தேவகியை ஊரை விட்டுப் போகச் சொல்லி மிரட்டுனான்.
ஆனா, அந்தம்மா தனக்கும் ஆதிமுத்துவுக்கும் பிறந்த பையனோட அங்கயே இருந்தாங்க. அதனால குணசேகரன், மிரட்டலுக்கு அடிபணியாத தேவகியை சிறு வயதிலேயேக் கொலை பண்ணியிருக்கான்! இந்த விஷயத்தை சாமியார் சொல்ல, அதிர்ச்சியில் உறையறான் சக்தி. ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகிய மூவரும் குணசேகரன் சின்ன வயதிலேயே செய்தக் கொடூரக் கொலையைக் கேட்டு கதறி அழ ஆரம்பிச்சிடுறாங்க! "அவுங்க பையன் ராணா இப்போ எங்க இருக்கா?"ன்னு சக்தி கேட்க, சாமியார் அதைச் சொல்லிச் சக்தியைக் கஷ்டப்படுத்த விரும்பலைன்னு சொல்றார்.
குணசேகரன் சாதாரண ஆள் இல்ல. சின்ன வயசுலயே கொலை செஞ்சிருக்கான்! இவன் கூடவா இத்தனை வருஷமா வாழ்ந்தோம்னு ஜனனி அண்ட் கோ FEEL பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! (அண்ணே, குணசேகரன் அண்ணே! நீங்க பெரிய வில்லன் தான்.) இந்த ரகசியம் தெரிஞ்சதும், சக்தி என்ன முடிவு எடுப்பான்? குணசேகரன் குடும்பத்தை இவங்க எப்படி சமாளிப்பாங்கன்னுப் பார்க்க, நாளைய எபிசோடுக்காகக் காத்துட்டு இருப்போம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications