Ethirneechal: எதிர்நீச்சலில் குணசேகரனுக்கே ஆப்பு வச்சுட்டாங்களே! சக்தியை கடத்தியது யார்? செம சம்பவம்!
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் இப்போ குணசேகரன் ஓட பிளாஷ்பேக் (FLASHBACK) தான் பெரிய புயலை கெளப்பி விட்டுருக்கு! தேவகியோட சொத்தை ஆதி முத்து அபகரிச்சதையும், தேவகியை குணசேகரன் கொடூரமா கொலை பண்ணுனதையும் சாமியார் கண்ணதாசன் கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டு, சக்தி செம டென்ஷன்ல இருக்காரு!
ஆனா, தேவகியோடப் பையன் ராணா எங்க இருக்கான்னு சக்தி கேட்டதுக்கு மட்டும் சாமியார் ஒரு வார்த்தை கூடச் சொல்ல மறுத்துட்டாரு. இந்த விஷயம் வீட்டுல இருக்குற ஜனனி, நந்தினி, ரேணுகா எல்லாருக்கும் தெரிஞ்சு, எல்லாரும் பதறிப் போயிருக்காங்க!

குணசேகரனின் பிளான்
குணசேகரன் ராமேஸ்வரத்துல இருக்கிறத் தன்னோட ஆட்களுக்கு போன் போட்டுக் கேட்டப்போ, "சக்தி எங்ககிட்ட இருந்துத் தப்பிச்சு ஓடிட்டான்!"னு சொல்லி இருக்காங்க. இதைக் கேட்ட குணசேகரன் டென்ஷன் ஆகி, "நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவனை மடக்கிப் பிடிச்சு, அவன்கிட்ட இருக்கிற ஆதாரங்களை எல்லாம் வாங்கிட்டு, அவனை அடிச்சு விரட்டுங்க!"ன்னு திரும்பவும் ஆர்டர் போட்டிருக்கார். சக்தியின் உயிருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்திடுச்சுன்னு தான் சொல்லணும்!
விசாலாட்சி வீட்டில் அதிர்ச்சி
இந்த சமயத்துல, அண்ணன் வீட்டுக்குப் போயிருந்த விசாலாட்சி வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க. ஆனா, கூடவேத் தன்னோடத் தம்பி சாமியாரையும் கூட்டிட்டு வந்திருக்காங்க! முல்லைகிட்ட வீட்டு பிரச்சனைகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு உள்ளே போன விசாலாட்சி, மருமகள்கள் கிட்ட, "இது என் மகன் உழைச்சு சம்பாதிச்சு வாங்குனச் சொத்து!"ன்னு வழக்கம்போலப் பெருமை பேச ஆரம்பிக்கிறாங்க.
இதைக் கேட்டு நந்தினிக்குக் கடுப்பாகி, "எங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்!"ன்னுச் சொல்ல, அப்போது திடீர்னு சாமியார் கூட வந்த அவருடையச் சிஷ்யனுக்குச் சாமி வந்திருக்கு! அவர் வந்து, "உங்கக் குடும்பத்துல ஒரு பெரிய உசுருப் போகப் போகுது!"ன்னு சொல்ல, அங்க இருந்த எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க! விசாலாட்சி கூட, "யாருக்கு என்ன ஆகுமோ?"ன்னுப் பதறிப் போயிட்டாங்க!
சக்தியை கடத்திட்டாங்க
எல்லாரும் "ஐயோ சக்திக்கு ஏதாவது ஆகிடுமோ"ன்னு பதறிக்கிட்டு இருக்க, ராமேஸ்வரத்துல இருந்து கிளம்பி வந்த சக்தியை ஒரு ரவுடி கும்பல் சுத்தி வளைச்சு இருக்கு! அவங்க, சக்தியோட முகத்துல மயக்க ஸ்பிரே (SPRAY) அடிச்சு, அவரை கடத்திட்டுப் போறாங்க. குணசேகரன் ஆள் அனுப்பி, ஆதாரங்களை பிடுங்கிட்டு அடிச்சுத் துரத்தச் சொன்னாரு. ஆனா, இந்த ரவுடி கேங் சக்தி மேலக் கை வைக்கவே இல்லை. இதைப் பார்த்தா, இது குணசேகரன் ஆட்களா இருக்க வாய்ப்பே இல்லை! இது ராணா அனுப்பி வச்ச ஆட்களாத்தான் இருக்கணும்! குணசேகரனால சக்திக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு, ராணா அவரை காப்பாத்திக் கடத்தி இருக்க வாய்ப்பு இருக்கு!
இப்போ சக்தி எங்க இருக்காரு? ராணா தான் இந்த கடத்தலுக்குக் காரணமா?ன்னு பார்க்க, அடுத்த எபிசோடு வரைக்கும் வெயிட் பண்ணி பார்ப்போம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications