எதிர்நீச்சலில் அண்ணன் தம்பியாக மாறும் சக்தி, கரிகாலன்.. ஜீவானந்ததிற்கு காத்திருக்கும் பிரச்சனை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாளின் 40% ஷேர் ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது.
இதனால் குணசேகரன் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் சக்தி மற்றும் கரிகாலன் இருவரும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சின்னத்திரையில் அதிகமாக ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்களும், இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். காரணம் இந்த சீரியலில் குணசேகரனால் கன்டண்ட் தாறுமாறாக அனைவருக்கும் கிடைக்கிறது.
பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் சீரியல் பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கதை எல்லாம் இப்போது மலையேறி போயாச்சு. 2கே கிட்ஸ்கள் முதல் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக எதிர்நீச்சல் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு பிரபலமாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களும் வந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் வரும் பிரச்சனைகளும் அதிகரிக்க அதிகரிக்க ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் யாரும் எதிர்பார்க்காமல் நடந்தது போல இப்போது பட்டமாளின் ஷேரில் 40% ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் இனி ஜனனி குணசேகரனுக்கு ஆதரவாக ஜீவானந்தத்தோடு சண்டை போடுவாரா? அல்லது ஜீவானந்தத்திற்கு ஆதரவாக மாறப்போகிறாரா? என்று எதிர்பார்க்க முடியாததாக இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரன் ஜனனியால் போன சொத்தை ஜனனியை வைத்து ஜீவானந்த்திடம் இருந்து வாங்கி காட்டுகிறேன் என்று சபதம் போட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் சக்தியாக நடிக்கும் சபரி பிரசாந்த்தும் கரிகாலனாக நடிக்கும் விமல் குமார் இருவரும் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகர் வடிவேலு இணைந்து நடித்த காமெடி ஒன்றுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து இருக்கின்றனர். அதில் நாம ரெண்டு பேரும் இனி அண்ணன் தம்பியாக இருக்கலாம் என்று சக்தி சொல்ல, அதற்கு கரிகாலன் நாம ரெண்டு பேருமா? இருக்கட்டும் என்று கூறுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications