எதிர்நீச்சல் முடிந்ததும் சன் டிவி பிரைம் டைம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.. ஆரம்பமே அசத்தல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பிரபலம் ஒருவர் அந்த சீரியல் முடிவடைந்ததும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடிக்க இருக்கிறார். அது யார் என்பதை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் இப்ப வரைக்கும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அண்ணன் தங்கை கதையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட நிலையில் இதில் நடித்த பல நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என்கிற கணக்கில் மாறி இருக்கிறார்கள்.

முக்கிய கேரக்டரில் இருக்கும் அண்ணன், தங்கை கூட இந்த சீரியலில் மாறிவிட்டார்கள். ஆனால் சீரியல் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் இந்த சீரியல் எவ்வளவு பாசிடிவ் கருத்துக்களை பெற்று வருகிறதோ அதுபோலவே நெகட்டிவ் கருத்துக்களையும் பெற்று வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு திருப்பங்களாக வந்து சீரியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் இந்த சீரியலில் சமீபத்தில் நான்கு பிரபலங்கள் புதியதாக என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். அதாவது வாணி ராணி சீரியலில் நடித்த பிரபலங்கள்தான் வாணி ராணி சீரியல் மற்றும் டிம்பிள் கேரக்டரில் நடித்த நடிகர் அருண்குமார் மற்றும் நீலிமா ராணி இருவரும் இந்த சீரியலில் புதியதாக அறிமுகமாக இருக்கிறார்கள்.
அவர்களை தொடர்ந்து அடுத்த ஒரு குடும்பமும் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். அதில் எதிர்நீச்சல் சீரியலில் தாரா கேரக்டரில் நடித்த குட்டி பாப்பா இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார். ஆனால் அவர் என்ன கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அதுபோல இன்னும் ஒரு சில நாட்களில் அவருடைய காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாரா தனக்கு அம்மாவாக நடிக்கும் நடிகையோடு எடுத்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து இருக்கிறார் அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் 9 வருடங்களுக்கு பிறகு நடிகை நீலிமா மற்றும் நடிகர் அருண்குமார் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அதுபோல சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த சீரியலில் வரப்போகிறதோ தெரியவில்லை. ஆனால் இதை ஒரு சிலர் பாராட்டி வந்தாலும் பலர் இந்த சீரியலுக்கு முடிவு இல்லையா? என்று வேதனையோடு கருத்துக்களை கொட்டி வருவதையும் காண முடிகிறது. எதிர்நீச்சலில் தாராவின் நடிப்பு எதார்த்தமாக இருந்தது. அதே நேரத்தில் வானத்தைப்போல சீரியலில் இனி அவர் என்ன கேரக்டரில் நடிக்கப் போகிறார்? அவருடைய நடிப்பு எப்படி இருக்க போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications