எதிர்நீச்சலில் கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. அந்த கால் யாருடையது தெரியுமா? இதனால்தான் இப்படி முடிவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் மறைவிற்கு பிறகு அவர் நடித்த குணசேகரன் கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கடைசியாக காரில் இருந்து வெள்ளை வேஷ்டி கட்டிய ஒரு நபர் இறங்கி நடந்து போவது போன்று காட்சிகளோடு சீரியலை முடித்திருந்தனர்.

இதனால் இது குணசேகரன் தானா? அல்லது அவருடைய அண்ணனா? அப்படி என்றால் யார் அந்த கேரக்டரில் நடிக்க போகிறார்கள்? என்று பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது.
பொதுவாக ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர் மறைந்து விட்டாலோ அல்லது அவர் வேறு ஏதும் சீரியலில் நடிக்க தொடங்கி விட்டாரோ இவருக்கு பதில் இவர் என்று உடனே மாற்றி விடுவது வழக்கம்தான். ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவிற்குப் பிறகு சில வாரங்களாக இன்னும் அந்த கேரக்டரில் யாரும் நடிக்காமல் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் சீரியல் இனி என்ன மாதிரி கதை பயணிக்க போகிறது என்றும் ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. பல இடங்களில் குணசேகரன் ஆக இன்னொரு நடிகர் நடிக்க வாய்ப்பே இல்லை என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இந்த சீரியலின் இயக்குநரும் குணசேகரன் மாரிமுத்து சாராக மட்டும்தான் இருக்க முடியும் என்று ஹிண்ட் கொடுத்து இருந்தார். அதே நேரத்தில் சீரியலிலும் குணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருந்தார் என்பது போன்று கதை போய்க்கொண்டிருக்கிறது.
அதனால் குணசேகரனுக்கு பதிலாக அவருடைய அண்ணன் இனி வில்லத்தனம் செய்வாரா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குணசேகரனின் அண்ணன் ஹாஸ்பிடலிலேயே பிறந்ததும் இறந்துவிட்டார் என்று விசாலாட்சி கூறியிருந்தார்.. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஞானமும் கதிரும் குணசேகரனை தேடி போயிருந்த நிலையில் அவரை ஒரு சாமியார் கோவிலில் தங்க வைத்துவிட்டு குணசேகரன் மன குழப்பத்தில் இங்கே வந்திருக்கிறார். நான் அவரை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வருகிறேன் என்று போயிருந்தார்.
அதோடு கடைசி நேரத்தில் காரில் இருந்து வெள்ளை வேஷ்டி கட்டிய ஒரு நபர் இறங்கி வருவது போன்று எபிசோடை முடித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அது குணசேகரனா? அவருடைய அண்ணனா? குணசேகரன் என்றால் இந்த கேரக்டரில் நடிக்கும் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு கருத்துகளும் ரசிகர்களின் மத்தியில் குவிந்து வருகிறது.
அங்கு நடந்து வரும் காலும் அதில் போட்டு இருக்கும் செருப்பையும் பார்க்கும்போது கால் கலராக தெரிகிறதாம். அதனால் இது வேல ராமமூர்த்தியோ அல்லது பசுபதியோ இருக்க வாய்ப்பு இல்லை என்றும் ஒரு வேளை இது இளவரசுவின் காலாக இருக்குமா? அல்லது இயக்குனரும் நடிகராகவும் இருக்கும் அழகம்பெருமாளாக இருக்குமா? என்றும் அவராக இருக்குமோ இல்லை இவராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருப்பதாக நேற்றிலிருந்து கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் நேற்றைய எபிசோடின் கடைசியில் இந்த காட்சிகள் வந்ததால் இன்றைய எபிசோடுகான டிஆர்பி எகிரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்காகத்தான் சீரியல் அணியினர் கச்சிதமாக காயை நகர்த்தி வருகிறார்கள்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications