எதிர்நீச்சலில் இதை கவனிச்சீங்களா..? "தன்னிலை மாறாமல்” பர்ஹானா.. சீரியல் "வரலாற்றில்” முதல் முறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்கும் சீரியலில் ஜீவானந்தம் கேரக்டரில் நடித்து வருகிறார்.

அவருக்கு பிஏவாக பர்ஹானா என்ற கேரக்டரில் நடிகை "ஜிபா ஷிரின்" நடித்துக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial Ziba has published a passionate post on national television about the opportunity

இந்த நிலையில் ஜிபா தேசிய தொலைக்காட்சியில் இந்தியாவில் முதல் முறையாக தனக்கு எதிர்நீச்சல் சீரியலில் கிடைத்த வாய்ப்பு பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை பல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சாதாரண பொது மக்கள் மட்டும் இல்லாமல் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக இந்த சீரியலை பாராட்டி தாங்கள் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த சீரியல் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் பார்க்கப்படுகிறது என்று அவரே கூறியிருந்தார். அதுபோல நடிகர் விஜய்யின் அம்மாவும் நானும் இந்த சீரியலை பார்ப்பேன் என்று கூறியிருந்தார்.

Ethirneechal Serial Ziba has published a passionate post on national television about the opportunity

இந்த நிலையில் அரசியல் பிரபலமான சுப வீரபாண்டியலும் தொடர்ச்சியாக தான் இந்த சீரியல் பார்த்து வருவதாகவும், அது போல இந்த சீரியலில் கதை நடிப்பு எல்லாமே எனக்கு பிடிக்கும் என்று வெளிப்படையாக தன்னுடைய facebook பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த சீரியல் குறித்து அதிகமாக சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.

Ethirneechal Serial Ziba has published a passionate post on national television about the opportunity

அதில் பலரும் கவனித்து இருந்தாலும் எளிமையாக கடந்து போயிருப்பார்கள் அந்த மாதிரி ஒரு விஷயத்தைப் பற்றி தான் விரிவாக பார்க்கப் போகிறோம். ஆமாங்க எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் ஜீவானந்தம் கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் தான் இயங்கும் சீரியல்களில் பெரும்பாலும் இவர் ஒரு முக்கியமான கேரக்டரில் அறிமுகம் ஆவதும் கதையில் முதுகெலும்பாக இருப்பதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருவது தான்.

Ethirneechal Serial Ziba has published a passionate post on national television about the opportunity

இந்த சீரியலில் கூட ஜீவானந்தம் கேரக்டருக்கு அதிகமாக முக்கியத்துவம் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட போது, ரசிகர்களே இந்த ஜீவானந்தமாக திருச்செல்வம் வந்தால் நன்றாக இருக்கும் என்று தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவரே அந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பிஏவாக பர்ஹானா நடித்து வருகிறார். இவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் கொள்கைகளை கொண்டவராக இருக்கும் ஜீவானந்தத்தின் பிஏவாக இருக்கிறார்.

அதே நேரத்தில் சமூக புரட்சி செய்யும் இவர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபி ஆடையை தொடர்ச்சியாக அணிந்து வருகிறார். இந்த நிலையில் இதுகுறித்து ஒரு புரட்சி இருப்பது பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். உண்மையில் பர்ஹானா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் பெயர் ஜீபா ஷெரின் இவர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் தான். நிஜத்தைப் போலவே சீரியலிலும் இவர் முஸ்லிமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial Ziba has published a passionate post on national television about the opportunity

இந்த நிலையில் ஒரு முஸ்லிம் நடிகை முதல் முறையாக ஹிஜாபி அணிந்து தமிழ் சினிமா சீரியலில் நடித்தது என்றால் அது நான்தான் என்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமானோர் பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

அதுபோல ஜிபா தொழில் முனைவராகவும் இருந்து வருகிறார். மாடலிங்கும் செய்து கொண்டிருக்கிறார். அதுபோல இவர் தான் சென்னையில் முதல் ஹிஜாபி இன்ஸ்பிலேன்சராம். எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஜனனி மற்றும் வசு இருவருக்கும் ஜிபா ஏற்கனவே பிரண்ட் தானாம். அவர்கள் மூலமாகத்தான் இந்த சீரியல் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது என்று ஜிபா சொல்லியிருக்கிறார்.

Ethirneechal Serial Ziba has published a passionate post on national television about the opportunity

இந்த நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியலில் பெண் நடிகைக்கு அவருடைய மதத்தின் அடையாளத்தோடு நடிப்பதற்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்து முதல் முறையாக "புரட்சியை" தொடங்கி வைத்திருக்கிறார். இந்த நிலையில் முதல் முறையாக சீரியலில் ஜிபா அறிமுகம் ஆகி இருக்கிறார். இவருக்கு இனி அதிகமாக முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜனனி மற்றும் ஜீவானந்தம் சந்தித்த பிறகு அதிகமாக பர்ஹானா கதையில் முக்கியமாக இருக்கப் போகிறார். அதே நேரத்தில் இவருடைய கேரக்டரின் முக்கியத்துவத்தால் இவரை போல இருக்கும் பெண்களுக்கு முன்மாதிரியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல தனக்கு "தன்நிலை மாறாமல்" நடிக்க வாய்ப்பு கொடுத்த திருச்செல்வத்திற்கு ஷிபா நன்றி கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+