மாரி செல்வராஜ்.. ஜாதி பார்த்து நடிக்க வாய்ப்பு..? உண்மையை உடைத்த "எதிர்நீச்சல்” மாரிமுத்து
சென்னை: சினிமாவிலும் ஜாதி பார்த்து தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பது பற்றி சில நடிகர்கள் "வா தமிழா வா" நிகழ்ச்சியில் தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கின்றனர்.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து அப்படியெல்லாம் சினிமாவில் நடப்பதே இல்லை என்று கூறும் விதமாக சில எடுத்துக்காட்டுகளையும் கூறியிருக்கிறார்.

அப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி சில ரகசியங்களையும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றியும் விளக்கி இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "எதிர்நீச்சல்" சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வேற லெவல் என்று சொல்ல வேண்டும். காரணம் ஆனந்தியின் அப்பாவாக இவர் நடிக்காமல் அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருப்பார்.

ஜாதி வெறி ஊறி போன ஒரு நபர் தன்னுடைய மகள் முன்பு அதை காட்டிக் கொள்ளாமல் இரட்டை வேடம் போடும் போதும் சரி, அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் தன்னுடைய மகனை காதலிக்கிறார் என்ற செய்தி தெரிந்து செய்யும் செயல்களாக இருந்தாலும் சரி, அப்படியே தத்ரூபமாகவே இவர் கண் முன்பு அந்த கேரக்டரை வாழ்ந்து காட்டி இருப்பார்.
இந்த நிலையில் இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கிய "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியில் மாரிமுத்து கலந்து கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி பேசிய வார்த்தைகள் தற்போது வீடியோவாக வைரல் ஆகி பரவி வருகிறது. ஏற்கனவே இயக்குனர் "மாரி செல்வராஜ்" தேவர்மகன் திரைப்படத்தைப் பற்றி பேசியது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருடைய மாமன்னன் திரைப்படம் வெளியாகி இரு தரப்பு கருத்துக்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் பற்றி பல தகவல்களை அதில் கூறி இருக்கிறார். அந்த வகையில்" வா தமிழா வா" எபிசோடில் "நகரம் அதிகம் சாதி பார்ப்பதில்லை என்றும் நகரம் சாதி பார்க்கிறது என்றும்" இரு தரப்பினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நடிகர் வடிவேலுவுடன் நடித்து பிரபலமடைந்த காமெடி நடிகர் ஒருவர் பேசும்போது சினிமாவில் அதிகமாக ஜாதி பார்க்கப்படுகிறது என்று சொல்ல, அதற்கு மாரிமுத்து இல்ல அப்படி எதுவுமே இல்லை என்று மறுத்து பேசுகிறார்.
அப்போது நடுவராக இருக்கும் கரு பழனியப்பன் இரண்டு பேரும் இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி? என்ன நடந்தது என்று சொல்லுங்க என்று சொல்ல, நடிகர் மாரிமுத்து நீங்க இங்க ஏறத்தாழ 80 பேரு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனால் இங்கு இருக்கிற எல்லாருக்கும் தனித்தனியா ஒரு அனுபவம் இருக்கும் நான் சென்னைக்கு வந்து 35 வருஷம் ஆகுது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர்களும் எனக்கு சினிமா வாய்ப்பு மறுத்தவர்களும் ஜாதி பார்த்து செய்தது இல்லை என்று சொல்கிறார்.
அப்போது அந்த காமெடி நடிகர் இப்ப ரெண்டு மூணு வருஷமா சில இயக்குனர்கள் ஏன் ஊரு காரனை வச்சி தான் நான் படம் எடுப்பேன். ஏன்னா நான் என் ஜாதிக்காரனா நான் வளர்த்து விடனும் என்று நினைக்கிறார்கள். அதற்கு இன்னொரு இயக்குனர் துணையாய் இருக்கிறாங்க. இப்படி ஒரு வட்டம் இருக்கு. அதுபோல இன்னொரு பக்கம் என் சாதிக்காரன் தான் நடிக்கணும் என் சாதிக்காரன் தான் மேல வரணும்னு நினைக்கிற ஒரு வர்க்கம் இருக்கு. இதனால இடைப்பட்ட நாங்க எல்லாம் கஷ்டப்படுறோம்.

உதவி இயக்குனர்கள் கூட தன் ஜாதி காரனாக தான் இருக்கணும்னு சிலர் நினைக்கிறாங்க என்று சொல்ல, அதற்கு கரு பழனியப்பன் இது ஆச்சரியமாகத்தான் இருக்கு என்று சொல்ல, அந்த காமெடி நடிகர் விடாமல் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை சார்.. நீங்களும் ஒரு இயக்குனர் என்கிறதுனால இப்படி மறைக்கலாம் என்று வெளிப்படையாக பேசுகிறார். அதற்கு கரு பழனியப்பன் அப்படி மறைக்கலாம் இல்ல சார் என்று பேச ஆரம்பிக்க, அந்த காமெடி நடிகர் விடாமல் நீங்க தனியா இருந்து யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும் என்று சொல்கிறார்.
மேலும் அந்த காமெடி நடிகர் இப்படி சினிமாவில் ஜாதி பார்க்கிறது சாருக்கும் தெரியும் என்று மேலும் மாரிமுத்துவை பற்றி பேச, நான் ஒரு நிமிஷம் பேசுறேன் என்று மாரிமுத்து சொல்ல அதற்கு விடாமல் அந்த காமெடி நடிகர் நான் நடிக்க வந்து 40 வருஷம் ஆச்சு சார். இன்னும் கொஞ்சம் நாளில் நான் செத்துப் போயிருவேன். நான் சாதிக்காமலே செத்துப் போயிருவேன். 18 வயசுல கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்தேன் நடிச்சு பெரிய ஆளாயிரலாம்னு வந்தேன்.
அவமானங்கள் தான் மிஞ்சிச்சு. மூணு வருஷமா சூட்டிங் இல்லாம வீட்டில் இருக்கிறேன். அந்த படத்துல கூப்பிடுவாங்களான்னு பார்க்கிறேன் ஆனா நீ அந்த ஜாதி இல்ல அதனால கூப்பிட மாட்டாங்கன்னு சொல்றாங்க. இந்த படத்துல கூப்பிடுவாங்களான்னு காத்திருக்கிறேன் ஆனா நம்ம கலருக்கு கூப்பிட மாட்டாங்க .அந்த ஊர்க்காரங்கள வளர்த்து விட்டால் தான் அந்த ஜாதி பெருசாகும்ன்னு ஒரு வர்க்கம் யோசிக்கிறாங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மாரிமுத்து உங்களுக்கு மூணு வருஷமா வாய்ப்பு இல்லை என்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நீங்க எத்தனையோ வடிவேலு படங்களில் ரொம்ப நல்ல நல்ல கேரக்டர் பண்ணி இருக்கீங்க. அதனால எங்கேயோ இருட்டுல அடி வாங்கி இருக்கீங்கன்னு தான் நினைக்கிறேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எங்கேயோ நடக்கும் சார். ஒரு விஷயத்தை ஓபனா சொல்லட்டா..? எல்லார் மனசுக்குள்ளேயும் யார் யார் என்ன ஜாதி என்று ஒரு வியூ இருந்து கிட்ட தான் இருக்கு.
அத பத்தி நாம ஓப்பனா பேசுறது இல்ல ஆனா இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் எனக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுத்தது ஜாதி பார்த்து கொடுக்கல. என் நடிப்பு மீது நம்பிக்கை இருந்ததால் தான் அவர் தந்தாரு. நான் அந்த கதாநாயகி கயல் ஓட அப்பாவா நடிச்சா நல்லா இருக்கணும்னு நினைச்சாரு. அதனால தந்தாரு அவர் ஜாதி பார்த்து தரல ஒரு துறையை நோக்கி நாம நகரும் போது அங்கே எல்லாரும் உடனே நம்ம தூக்கி வச்சு கொண்டாடிட மாட்டாங்க.
இங்க பாரதிராஜாவும், பாக்கியராஜும், பாலச்சந்திரனும் ஆரம்பத்திலேயே யாராலும் தூக்கி வச்சு கொண்டாடப்படவில்லை. ஆரம்பத்தில் அவங்களும் எவ்வளவோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்தித்து தான் சினிமாவில் முன்னேறி இருக்காங்க என்று அந்த எபிசோட்டில் மாரிமுத்து பதில் கொடுத்திருக்கிறார்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications