பாக்யராஜ் ஆன்மா கூட உங்களை மன்னிக்காது.. உயிரோடு இருக்கும்போது சதி.. இப்போ விளம்பரம்! பிரபலம் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் சங்கத் தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பல தேர்தல்களில் அணிகள் பிரிவதும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும் பார்த்து இருக்கிறோம். சினிமாவிலும் அரசியல் இருக்கிறது என்று பல நேரங்களில் நிரூபணம் ஆகி இருக்குது.

இப்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலும் அதே ரூட்டில் சூடு பிடிக்கிறது. ஆனால் இந்த முறை தேர்தலை தாண்டி மறைந்த கே பாக்யராஜின் பெயரும் அதிகமாக அடிபடுகிறது. இது பற்றி வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எழுத்தாளர் சங்க தேர்தல்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 2026- 29 காலத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஜூலை 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வட பழனியில் உள்ள திரையிசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

K Bhagyaraj Valai Pechu Bismi Cheran

இந்த தேர்தலில் போட்டு இடுவதற்காக பாக்கியராஜ் முடிவு எடுத்திருந்தார். இது குறித்து தான் அவர் இறப்பதற்கு முந்தைய நாள் பல பிரபலங்களுக்கு போன் செய்து பேசியிருந்தார் என்றும் அனைவரும் அவருடைய இறுதி அஞ்சலியில் கண்ணீருடன் பேசி இருந்தனர். அது போல இந்த தேர்தலில் இயக்குனர் சேரன் தலைமையில் "நம்ம கே பாக்யராஜ்" அணி களம் இறங்கி உள்ளது.

பாக்யராஜ் பெயரில் 2 அணி

தலைவர் பதவிக்கு சேரன், பொதுச் செயலாளர் பதவிக்கு பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் பதவிக்கு ஆர் சுந்தர்ராஜன் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிகளுக்கு சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்டோரும் களத்தில் இருக்கிறார்கள். இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால் எதிரணியும் பாக்யராஜின் பெயரையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

"திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் அணி" என்ற பெயரில் இன்னொரு அணி தேர்தலை சந்திக்கிறது. இதனால் பாக்கியராஜ் பெயரில் இரண்டு அணிகளா? என்ற கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

K Bhagyaraj Valai Pechu Bismi Cheran

வலைப்பேச்சு பிஸ்மி பதிவு

இந்த நிலையில் தான் வலைப்பேச்சு பிஸ்மி தனது பதிவில் "கே பாக்யராஜ் உயிரோடு இருந்தபோது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு சதி செய்தவர்களும் தேர்தல் வெற்றிக்காக இப்போது பாக்யராஜ் பெயரை பயன்படுத்துவது என்பது கேவலத்தின் உச்சம். பாக்யராஜின் ஆன்மா இவர்களை மன்னிக்காது" என்று பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் யார் பெயரையும் பிஸ்மி சொல்லவில்லை.

ஆனால் தேர்தல் நேரத்தில் பாக்யராஜ் பெயரில் 2 அணிகள் கிளம்பி இறங்கி இருக்கும் சூழலில் அவர் இப்படி ஒரு பதிவு போட்டிருப்பதால் அவர் யாரை சொல்கிறார் என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

பின்னணி என்ன?

இதன் பின்னணி பற்றி பார்த்தால் தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் ஏற்கனவே இருந்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தன்னுடைய பதவியை தக்க வைத்தார். அப்போது அவரை எதிர்த்து இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் போட்டியிட்டு இருந்தார்.

பாக்யராஜ் பற்றி சிவகுமார் சொன்ன வார்த்தை.. கதறி அழுத பூர்ணிமா.. சந்தோஷத்தில் பேசிய சாந்தனு
ஆனால் சங்க தேர்தல் மற்றும் சங்கத்துக்குள் நடந்த சில விவகாரங்கள் பாக்யராஜ்க்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக இயக்குநர் பார்த்திபன் சமீபத்தில் கூட பேசி இருந்தார். பாக்யராஜ் நடுநிலையாகவும் சிறப்பாகவும் வேலை பார்த்து இருந்தாலும் தேர்தலை சந்தித்தபோது சில விஷயங்கள் அவருக்கு மன உளைச்சலை கொடுத்ததாக பார்த்திபன் சொல்லி இருந்தார். இந்த நிலையில் தான் பிஸ்மி இப்போதைய பதிவு வெளியிட்டிருப்பது கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+