“நானே மறந்துட்டேன்!” ரசிகர் கேள்விக்கு நடிகை திரிஷாவின் க்யூட் பதில்! ஓபனாக பேசுறாங்களே!
சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் கலகலப்பாக பேசுகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதே நேரத்தில், அவர் நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் குறித்த புதிய தகவல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரிஷாவின் பதில்
இந்த ஸ்டோரியில், திரிஷா தனது X (ட்விட்டர்) பதிவை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு ரசிகர், "திரிஷா இன்னும் இவ்வளவு யங் ஆக இருப்பது ஆச்சரியம்... அவர் reverse ageing போல இருக்கிறார். மேலும், சூர்யாவுடன் 'கருப்பு' படத்திற்கு முன்பு அவர் நடித்த கடைசி படம் என்ன?" என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த திரிஷா, "Thank you 😉 Even I forgot. Good to know they set a reminder now atleast 😅" என்று மிகவும் க்யூட்டாகவும் சிரிப்பூட்டும் விதமாகவும் பதிலளித்துள்ளார். அதாவது, "நானே மறந்துட்டேன்... இப்போதாவது ரிமைண்டர் வச்சிருக்காங்க நல்லது!" என்ற பொருளில் அவர் கூறியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கருப்பு பட அப்டேட்கள்
கருப்பு திரைப்படம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ளது. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்த படம் வரும் மே 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, இசையமைப்பாளர் சாய் அப்பயங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

வழக்கறிஞராக திரிஷா
இந்த படத்தில் திரிஷா "ப்ரீத்தி" என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரது கதாபாத்திர வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். கதையின் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் வலுவான கதாபாத்திரமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திரங்கள் கூட்டம்
இந்த படத்தில் சுவாதிகா, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒருபுறம் திரிஷாவின் கிண்டல் கலந்த பதில் வைரலாகி வரும் நிலையில், மறுபுறம் 'கருப்பு' படத்தின் அப்டேட்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சூர்யா - திரிஷா கூட்டணி மீண்டும் திரையில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஹைலாக பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, இன்றும் தனது நடிப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார். 'கருப்பு' படம் அவரது பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையுமா என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Karuppu vs Blast: கருப்பு மற்றும் பிளாஸ்ட் வசூல் போட்டி? பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்? அதுவும் நேற்றைய நிலவரம் மாஸ் -
"வெறுப்புல கருப்பு படம் பார்க்கல!".. பிறகு நடந்த அதிசயம்.. மனம் திறந்த நடிகை ஆனந்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications