அந்தரங்கம் அம்பலம்.. ஜெய்சங்கரை விரட்டி காதலித்த நடிகை.. மக்களை கவர்ந்த ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடி
சென்னை: ஜெய்சங்கரை பல நடிகைகள் விரும்பினார்கள்.. அதிலும் ஒரு பிரபல நடிகை அவரை விரட்டி விரட்டி காதலித்தார். எனினும், திருமண விஷயத்தில் ஜெய்சங்கர் தெளிவாக இருந்தார் என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார். அத்துடன், நடிகர் ரவிச்சந்திரன், ஜெயலலிதா பற்றியெல்லாம் விரிவாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "நாடகத்தனங்கள் குறைந்து நடிப்பு என்று வந்தபிறகு, சினிமாவுக்கு வந்தவர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோர்.. ஹாய் என்ற கேஷூவல் ஸ்டைலை கொண்டுவந்தவர் ஜெய்சங்கர்..

ஜெய்சங்கர் குணம்
கல்லூரியில் படித்தவர்.. நியூ காலேஜில் பிஏ படித்தவர்.. அவரது பிள்ளைகள் டாக்டர்கள்.. தன் பிள்ளைகளை சினிமாவுக்கு கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஜெய்சங்கர்.
"எம்ஜிஆர், சிவாஜி முன்னாடியெல்லாம் நடிப்பில் நாம் நிற்கக்கூட முடியாது. நாம சினிமாவில் அப்படியென்ன சாதித்துவிட்டோம்? என்று சிவக்குமாரிடம் ஜெய்சங்கர் சொல்லி சொல்லி சிரிப்பாராம்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்றோருக்கு சம்பளம் தந்து படம் எடுக்க
முடியாத ஏழை புரொடியூசர்களுக்கு, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோர்தான், படங்களை நடித்து தந்தவர்கள், இவர்கள் 3 பேருமே பெரிய அளவுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஆனால் 2ம் கட்ட நடிகர்களாகவே, கேரக்டர் நடிகர்களாகவே இருந்துவிட்டனர். அதிலும் சிவக்குமாரின் அழகு, நடிப்புக்கு வேறொரு உச்சத்துக்கு போயிருக்க வேண்டியவர்.
பாப்புலர் ஜோடி
ஜெயலலிதா ஏற்கனவே பாப்புலராக இருந்தாலும், குமரிப்பெண் படத்தில் ரவிச்சந்திரனுடன் நடித்தபோது, இருவருமே இன்னும் அதிக அளவில் பாப்புலராகி விட்டனர். குமரிப்பெண் படத்தில் ரவிச்சந்திரன் செய்திருந்த சண்டைக்காட்சிக்கு நிகராக இன்றளவும் எதுவும் இல்லை.. அவரது கராத்தே சண்டைக்காகவே அந்த படம் ஓடியது..
வருஷத்தை பாரு என்ற ரயிலில் பாடும் பாட்டில் கவர்ச்சியின் உச்சத்துக்கு போனார் ஜெயலலிதா. அந்த படத்தின் பாடல்கள் சக்கை போடு போட்டன.. இதற்கு அடுத்தபடியாக வெளியான, நான் என்ற படத்திலும் இவர்கள் 2 பேருமே ஜோடி..
ராமண்ணா டைரக்ஷனில் வித்தியாசமான கதை.. இநத படமும் ஹிட்டடித்தது.
காதல் இருந்தது
இதேபோல ஜெய்சங்கருடன் யார் நீ படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார்.. இந்த ஜோடி மக்களிடம் பிரபலமானது.. தொடர்ந்து பல படங்கள் நடித்தனர். இருவருக்குள்ளும் நெருக்கம் அளவுக்கு அதிகமாக போனது.. இவர்களுக்குள் ஒரு காதல் இருந்தது.. ஆனால், பல எதிர்ப்புகள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அது கை கூடவில்லை.
ஜெய்சங்கரை பல நடிகைகள் விரும்பினார்கள்.. அதிலும் ஒரு பிரபல நடிகை அவரை விரட்டி விரட்டி காதலித்தார். எனினும், திருமண விஷயத்தில் ஜெய்சங்கர் தெளிவாக இருந்தார் என்றெல்லாம் பேட்டியில் கூறியிருக்கிறார்.
உதவிகளை செய்தவர்
ஏற்கனவே ஒரு சேனலுக்கு டாக்டர் காந்தராஜ் அளித்திருந்த பேட்டியில், "வெளியில் யாருக்கும் சொல்லாமலே உதவிகளை செய்தவர் ஜெய்சங்கர்.. மற்றவர்கள் எல்லாம், பத்திரிகையாளர்களை கூப்பிட்டு வைத்துக்கொண்டு, போட்டோவுக்கு போஸ் தந்து, 'கொடை வள்ளல்' என்று பெயரை போட்டுக் கொண்டார்கள். ஆனால், ஜெய்சங்கர் அப்படி எதையுமே செய்ததில்லை.
ஜெயலலிதா, ஜெய்சங்கருடன் நீ, யார் நீ, முத்துச்சிப்பி என வரிசையாக நடித்த பல படங்கள் சூப்பராக ஓடியது.. தினத்தந்தியில் "ஜெயா ஜோடி" என்றுதான் இருவரின் பெயரையும் பொதுவாக போடுவார்கள்.. "ஜெய ஜோடி இந்த படத்திலும் வழக்கம்போல அபாரமாக நடித்திருந்தார்கள்.. ஜெமினி-சாவித்திரிக்கு பிறகு அற்புதமான ஜோடி கிடைத்தது" என்று பத்திரிகைகள் விமர்சனங்களை எழுதின.
விமர்சனங்கள்
இருவரும் நெருங்கி பழகியது எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான்.. அன்று முரசொலியில் கட்டம் கட்டியே அதை எழுதினார்கள்.. கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர்.. அம்மு என ஒருசிலர்தான் ஜெயலலிதாவை உரிமையாக கூப்பிடுவார்கள். அப்படி ஒருவர் கூப்பிட்டு வந்ததுதான் அந்த தகராறுகள் எல்லாம்.
தன்னை கண்டு யாராவது பயந்துவிட்டால், அவர்களை அதற்கு பிறகு எம்ஜிஆர் கண்டுக்கவே மாட்டார். ஜெய்சங்கர், ரஜினி இவர்கள் இருவருக்கும் அதுதான் நடந்தது. திமுகவில் ஜெய்சங்கர் உறுப்பினராக இருந்தாலும், கட்சி, பதவியில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications