ஆளே மாறிட்டாரே.. வில்லங்கமான கேள்விக்கு அசராமல் அசத்திய விஜய் சேதுபதி.. வெயிட் லாஸ் பற்றி கேட்டதுமே.. வாவ்
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் டைரக்ஷனில் உருவான படம்தான் ACE. இந்த படத்தில் ருக்மிணி வசந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தான் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டது பற்றியும், உடல் எடை குறைப்பு குறித்தும் பேசியிருக்கிறார்.. இது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருபவர் விஜய் சேதுபதி.. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகியிருக்கும் விஜய் சேதுபதி, வெறும் ஹீரோ என்ற கேட்டகிரிக்குள்ளேயே அடங்கிவிடாமல் ஏராளமான படங்களில் கேரக்டர்களில் நடித்து விடுகிறார்.. ஹீரோ என்ற இமேஜை தாண்டி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததால், இந்தி பட உலகிலும் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார்

கூலிங் கிளாஸ் விஜய் சேதுபதி
சமீபத்தில் ACE படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி கூலிங் க்ளாஸ் போட்டுகொண்டு வந்தார்.. அப்போது ஒரு செய்தியாளர், மிஷ்கினுக்கு போட்டியாக இறங்கிடீங்களா? என்று கேட்டார்.
அதற்கு விஜய் சேதுபதி, "கண்ணாடி போட்டா மிஷ்கினுக்கு போட்டியாக ஆகிடமுடியாது? மிஸ்கின் ஒரு சிறந்த இயக்குனர். அவருடன் நான் போட்டிபோட வேண்டுமென்றால் அவரை போல படம் எடுக்கணும். கண்ணாடி போட்டால் போட்டி கிடையாது" என்று அசத்தல் பதிலை தந்தார்.
ஏன் இப்போது நிறைய படங்களில் நடிப்பதில்லை? என்று மற்றொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் சேதுபதி, "என்ன சார் ? நிறைய படங்களில் நடித்தால் ஏன் இவ்வளவு படங்களில் நடிக்கிறீங்கன்னு கேட்குறீங்க ?கம்மியா நடித்தால் ஏன் நிறைய படங்களில் நடிக்கிறது இல்லன்னு கேட்குறீங்களே ?" என்று திருப்பி கேட்டார்.
ஒர்க் அவுட் - ஜிம்
பிறகு உடல் எடையை குறைத்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி, "ஜிம்-க்கு போனேன், ஒர்கவுட் பண்ணேன். ஆனால் சில சாப்பாடு எனக்கு செட் ஆகல.. அதனால் 70 சதவீதம் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறேன்" என்றார்.
அதேபோல, சென்னையிலுள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடினார்.. அப்போதுகூட, எடை குறைத்தது எப்படி? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள்..
வைரலாகும் வெயிட் லாஸ் டிப்ஸ்
அதற்கு விஜய் சேதுபதி, "எவ்வளவு வெயிட் இருக்கிறேன் என்பதை பார்க்க, வெயிட் மிஷினை பயன்படுத்துவதில்லை.. அப்படி பார்க்கும்போது, அதில் காட்டும் எண்கள் என்னை வெகுவாக சோர்வடைய செய்துவிடும். அந்த எண்களுக்கு பதிலாக, உடல் என்ன சொல்கிறது என்பதையே நான் கேட்கிறேன்.. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, எனக்கு என்னை பற்றி என்ன தோன்றுகிறது என்பதே முக்கியம்..
நான் எவ்வளவு வெயிட் இருக்கிறேன் என்பதைவிட, எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே முக்கியம்... எப்போதுமே நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், அதுவே என்னுடைய உடல் எடை குறைப்பதற்கு போதுமானதாக உள்ளது.. உடல் எடையை விட மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம்" என்று நச்சென சொன்னார்.
உடல் எடை பற்றியே தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், உடல் எடையை விட, மன மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம் என்ற விஜய் சேதுபதியின் இந்த கருத்துதான், சோஷியல் மீடியாவில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications