கூட்டை விட்டு போன ஜோதிகா.. சூர்யாவுக்குள்ளேயே ஜோ.. சிவக்குமாரின் பியட் கார் இன்னும் இருக்கு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "என்னுடைய கண்ணாடிப்பூவுக்கும் நன்றி. அவர் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. ஜோதிகாவுக்கு நன்றி" என்று சூர்யா நேற்றைய ரெட்ரோ பட டிரெயிலர் விழாவில் பேசியிருந்தார். அப்போதுதான் விழாவுக்கு ஜோதிகா வரவில்லை என்பது தெரிந்தது. கங்குவா பட விழாவுக்கும் ஜோதிகா வராத நிலையில், ரெட்ரோ பட டிரெயிலர் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "ஜோதிகாவுக்கு சென்னை வருவதற்கே பிடிக்கல.. சிவக்குமார் தரப்புக்கு ஜோதிகா சினிமாவில் நடிப்பது ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை.. ஜோதிகாவுக்கு, சென்னை வந்து மாமனார், மாமியாரை சந்திக்க விருப்பமில்லை.. இந்த ஏழாம் பொருத்தம் இப்போதுவரை தொடர்ந்து வருகிறது.

Television actress Jyothika Sivakumar

ஆரம்பத்தில் 36 வயதினிலே படத்தில் மட்டுமே நடிப்பதாக சொல்லிவிட்டு நடிக்க போனார் ஜோதிகா.. பிறகு இன்னொரு படத்தில் மட்டும் நடிப்பதாக சொன்னார்.. பிறகு இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இது சிவக்குமாருககு மன உளைச்சலாகிவிட்டது. இதை வெளியேயும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

பெரிய பங்களா கட்டிய சிவக்குமார்

அதேபோல, தான் குடியிருந்த வீட்டுக்கு பக்கத்திலேயே இன்னொரு இடத்தையும் வாங்கி, பெரிய பங்களா கட்டினார் சிவக்குமார். அதில், கார்த்தி, சூர்யா குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ விரும்பினார்.. ஆனால், அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தரவில்லை ஜோதிகா. மும்பையிலேயே குழந்தைகள், கணவனுடன் செட்டில் ஆக முடிவெடுத்துவிட்டார்.. மிகப்பெரிய ஆடம்பர கார் ஒன்றையும் சூர்யாவுக்கு வாங்கி தந்துள்ளார்..

இதற்கு நேர் மாறானவர் சிவக்குமார்.. ஃபியட் கார் மட்டும் அன்று வாங்கினார் சிவக்குமார்.. கடைசிவரை அந்த காரை அவர் விற்கவும் இல்லை. இன்றுவரை வீட்டில் வைத்து பாதுகாத்து வருகிறார். படாடோபமாகவும், செலவாளியாகவும் வாழாதவர் சிவக்குமார். மும்பை சென்றுவிட்ட பிறகு, சென்னைக்கு ஓட்டுப்போடவும் ஜோதிகா வரவில்லை. மகன் தேவ் கராத்தேயில் முதலிடம் வந்தபோதும் ஜோதிகா வரவில்லை.

ஜோதிகாவுக்குள் சூர்யா

மாமியார், மாமனார் தரப்பில்தான் ஜோதிகாவுக்கு முரண்பாடு உள்ளதே தவிர சூர்யாவுடன் கிடையாது.. நிறைய பேர் சூர்யா-ஜோதிகா பிரிந்துவிட்டதாக சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. அது தவறான விஷயம்.. ஜோதிகாவுக்குள்ளே சூர்யா இருக்கிறார்.. சூர்யாவுக்குள்ளே ஜோதிகா இருக்கிறார்.. எனவே, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு, பிரிவு எதுவுமே கிடையாது. விரைவில் இந்திப்படத்தில் சூர்யாவும் நடிக்க போகிறார்.

ஜோதிகாவின் நடிப்பு

அதேபோல, சூர்யாவுக்கு சீனியர் ஜோதிகா ஆவார்.. ஜோதிகாவை திருமணம் செய்தபிறகுதான், சூர்யாவின் நடிப்பில் மெருகேற்றம் காண முடிந்தது.. சூர்யாவைவிட ஜோதிகா அதிக சம்பளத்தை அன்றே பெற்றவர்.. எனினும், இன்றுவரை சூர்யாவின் பேச்சை மீறி ஜோதிகா சினிமாவில் நடிக்கவில்லை.. ஜோதிகா சினிமாவில் நடிப்பது சிவக்குமார் தரப்புக்கு பிடிக்கவில்லையே தவிர, சூர்யாவுக்கும் பிடித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+