சாவித்திரி எலும்பும் தோலுமாக? உயரத்தில் பறந்து, போதையில் வீழ்ந்த "கொடை வள்ளல்" சாவித்ரி: பிரபலம் நச்
சென்னை: திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு உண்மையான கொடை வள்ளல் என்றால் அது சாவித்திரிதான்" என்று தமிழா தமிழா பாண்டியன், பேட்டி ஒன்றில் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். அதேசமயம், நடிகையர் திலகம் சாவித்ரியின் கடைசிகால வாழ்வு குறித்தும் விரிவாக தெரிவித்துள்ளார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், 'ஜெமினி கணேசன் இல்லையென்றால், சாவித்திரி கிடையாது. அப்போது சாவித்ரியை சுற்றி மகளிர் அமைப்புகள், பணக்கார பெண்கள் இருப்பார்கள்.. இவர்கள்தான் அவரை படம் எடுக்க தூண்டிவிட்டனர். சிவாஜியை கதாநாயகனாக போட்டு, சொந்தமாக படம் எடுக்கறாங்க சாவித்திரி.. அப்போது சிவாஜியை படப்பிடிப்பில் நிறைய வேலை வாங்கறாங்க

சிவாஜி கணேசன்: சில சீன்களை அந்த படத்தில் சிவாஜி மாற்ற சொல்லியும், சாவித்திரி மாற்றவில்லை. இதனால், சாவித்திரிக்கும், சிவாஜிக்கும் தகராறு எழுகிறது. இவர்களுக்குள் நடுவே உள்ளே புகுந்து பஞ்சாயத்து செய்தார் ஜெமினி.
சாவித்ரியிடம், 'நான்தான் உன்னை படம் எடுக்க வேண்டாம்னு சொன்னேனே? சிவாஜியை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு உனக்கு டைரக்ஷன் தெரியாது' என்கிறார்.. அதற்கு சாவித்ரி, "நான் படம் எடுப்பதால் உங்களுக்கு பொறாமை" என்று பதிலுக்கு சொல்ல தம்பதிக்குள் பிரச்சனை வெடிக்கிறது.
கதையம்சம்: இதைப்பார்த்த சிவாஜி, தன்னால் எந்த பிரச்சனையும் வேண்டாம், என்று சொல்லி, அந்த படத்தை முழுமையாக நடிச்சு தந்தார்.. ஆனால், ஹிட் ஆக வேண்டிய அந்த படம், ஓடவில்லை. என்ன காரணமென்றால், கதை அம்சத்தில் பல குளறுபடிகள் இருந்தன.. இதை ஜெமினி கணேசன், பலமுறை சுட்டிக்காட்டியும் சாவித்திரி கேட்கவில்லை.. பெரிய தோல்வி அடைந்துவிட்டது.
இந்தோனேஷியா அரசாங்கத்தில், பாசமலர், பாவமன்னிப்பு. மிஸ்ஸியம்மா, 3 படங்களும் அவார்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.. அதனால் இந்தோனேஷியாவுக்கு செல்கிறார்கள் ஜெமினியும், சாவித்ரியும்.. அப்போது வெளிநாட்டு நடிகர்-நடிகைகளோடு தங்கி, பார்ட்டிகளில் கலந்து கொள்ள நேரிடுகிறது.
இந்தோனிஷயா: அப்போதுதான் இந்தோனேஷியாவில் முதன்முதலாக மது குடிக்க ஆரம்பிக்கிறார் சாவித்திரி... ஆனால், இந்தோனேஷியாவிலிருந்து வந்த பிறகும் மதுவை விடவில்லை சாவித்திரி.. ஜெமினி கணேசன் தடுத்தும்கூட சாவித்திரி மதுவை விடவில்லை. மதுப்பழக்கத்திலிருந்து விடுபடும்போது, திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சாவிரியுடனானதொடர்பை துண்டித்து கொண்டார் ஜெமினி.
இதற்கு பிறகு, சாவித்திரி மலையாளத்தில் முதல்முதலாக கவர்ச்சி காட்டி நடிக்கிறார். இதனால் அதுவரை கட்டிக்காத்த மொத்த இமேஜூம் உடைந்துவிட்டது.. தெலுங்கிலும் டோட்டல் இமேஜ் அவுட், தமிழிலும் டோட்டல் இமேஜ், மலையாளத்தில் நடித்த முதல்படத்திலேயே கெட்டப்பெயர் கிடைத்துவிட்டது.
மரியாதை போய்விட்டது: மலையாள படத்தில் பணத்துக்காக ஏன் அப்படி நடிச்சே? இதுவரை கட்டிக்காத்த மரியாதை போச்சே? என்று சக நடிகைகள் சொன்னதை கேட்டு, சாவித்திரியால் ஜீரணிக்கவே முடியவில்லை.
பெங்களூரில், ரத்த அழுத்தம் அதிகமாகி, ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயங்கி விழுந்து விட்டார்.. உடனே முதல் தகவல் சரோஜாதேவிக்கு தெரிய வருகிறது. எப்படியாவது சாவித்திரியை காப்பாத்துங்க என்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர சொல்கிறார். ஆனால், பாதி உடல் நலம் மட்டுமே தேறுகிறது.. இதற்கு பிறகு சென்னை வந்தும்கூட, மருந்து, மாத்திரைகளைவிட மதுவையே அதிகம் நாடினார் சாவித்ரி.. இதனால், மீண்டும் மீண்டும உடல்நிலை மோசமடைந்து, உருக்குலைந்து போய்விட்டது
வறுமை, பணமில்லை, சொத்துக்களும் ஏலம் போய்விட்டன.. எலும்பும் தோலுமாக சென்னை வீட்டில் படுத்து கிடந்தாங்க.. இது திரையுலகில் அத்தனை பேருக்கும் பெரிய அதிர்ச்சி..
கொடை வள்ளல்: ஆனால் மிகச்சிறந்த கொடை வள்ளல் சாவித்திரி.. குழந்தையை தூக்கிகொண்டுவந்து, எத்தனையோ பேர் வந்து உதவி கேட்பார்கள்.. யார் கேட்டாலும் பணம் தருவாங்க.. பிரதமர் நிதி, பாகிஸ்தான் நிதிக்காக தன்னுடைய நகை, பணம் எல்லாவற்றையும் அள்ளி அள்ளி தந்தார். அதற்கு கணக்கெல்லாம் பார்க்கவில்லை. திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு உண்மையான கொடை வள்ளல் என்றால் அது சாவித்திரிதான்" என்றெல்லாம் மேலும் பல்வேறு விஷயங்களை அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
இந்தோனேஷியா: அப்போதுதான் இந்தோனேஷியாவில் முதன்முதலாக மது குடிக்க ஆரம்பிக்கிறார் சாவித்திரி... அங்கு பல நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் வந்திருந்ததால், பார்ட்டிகளில் கலந்து கொள்ள நேரிடுகிறது. ஆனால், இந்தோனேஷியாவிலிருந்து வந்த பிறகும் மதுவை விடவில்லை சாவித்திரி.. ஜெமினி கணேசன் தடுத்தும்கூட சாவித்திரி மதுவை விடவில்லை. மதுப்பழக்கத்திலிருந்து விடுபடும்போது, திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சாவிரியுடனானதொடர்பை துண்டித்து கொண்டார் ஜெமினி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications