யோகி பாபு தூக்கி நிறுத்திட்டாரு.. என்ன சிம்ரன் இதெல்லாம்? சிலிர்க்க வைத்த டூரிஸ்ட் ஃபேமிலி: பிரபலம்
சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. வெளியான நாளிலிருந்தே, சிறப்பான விமர்சனத்தை இந்த படம் பெற்று வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், இப்படத்தின் இயக்குனரை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பாராட்டி தள்ளியிருக்கிறார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "இலங்கை சம்பந்தமாக பல படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.. ஆனால், யுத்தங்களை, போராட்டங்களை பற்றி சொல்லாமல், இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வரும் குடும்பம், இங்கே எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் இங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? என்பதை பற்றி இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.

200 கிலோ மீட்டர்
புலம்பெயர்ந்து வாழ்வது என்றாலும், குடும்பமாக வாழ்வதற்கும், பேச்சிலராக வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது.. பொதுவாக உலகம் முழுவதிலுமே 200 கிலோ மீட்டருக்குள்ளேயே மொழி, அம்மக்களின் வாழ்க்கை முறை, உடை, உணவு, உட்பட அனைத்துமே வித்தியாசப்படும். இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.. புலம்பெயர்ந்து வந்து இகு பழகும்போது, சின்ன சின்ன விஷயங்களை கூட இதில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
மொழி என்பது பெரிய விஷயமில்லை..அன்பு மட்டுமே முக்கியம் என்பதை பதிவு செய்துள்ளார்.. இந்த படத்தில் வரும்நாய்கூட, அன்பு எங்கிருக்கிருக்கிறதோ.. அவர்களை தேடித்தான் வருகிறது.. ஹை பட்ஜெட்டில் எடுக்கப்படும் பல படங்கள் இங்கே மண்ணை கவ்வும்போது, இந்த படம் அமைதியாக உள்ளது.. இந்த படத்தின் இயக்குனர், கதையை சொல்லும் விதம் மிகவும் அருமையாக இருந்தது..
யோகிபாபு அருமை
யோகிபாபு 3 காட்சிகள் மட்டுமே வருகிறார்.. ஆனால், படத்தை தூக்கி நிறுத்திவிட்டார் என்றே சொல்லலாம்.. கடைசியில் யோகிபாபுவை காட்டாமல், பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே முடித்துகொண்டதுபோல் காட்டியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம். யோகிபாபுவின் காமெடியும் அருமையாக இருந்தது.. "ஆதார் அட்டையில் முகம் அழகா இருக்குன்னு பார்க்குறீங்களா? இது போலி ஆதார் அட்டை" என்று கமெண்ட் அடிக்கிறார் யோகிபாபு.
என்ன சிம்ரன் இதெல்லாம்? என்று கலாய்ப்பதும், சென்னையை தோண்டி தோண்டி, கோலார் தங்க வயல் மாதிரி ஆக்கிட்டாங்க என்று போகிற போக்கில் சொல்வதும் சிறப்பாக இருந்தது. யோகிபாபுவை சரியாக பயன்படுத்தியிருந்தார்கள்.
புரட்டிப்போட்ட படம்
பல வருடங்கள் கழித்து, குழந்தைகளுடன் பலரும் தியேட்டர்களுக்கு செல்வதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. சசிகுமார் வாழ்க்கையில் புரட்டிப்போட்ட படமாக இது இருக்கும்.. குட்பேட் அக்லி படத்தை காட்டிலும் சிம்ரன் இந்த படத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்.
கேசவா காலனி மட்டுமல்ல, அனைத்து ரசிகர்களுமே சசிகுமாரை நேசிக்கக்கூடிய அளவுக்கு சிறப்பான கேரக்டர் தரப்பட்டுள்ளது.. சிறிது நேரமே வந்தாலும், இன்ஸ்பெக்டர் ரோல் சிறப்பாக செய்திருந்தார்.. டூயட், காதல் காட்சி எதுவுமே இல்லாமல், அற்புதமான படத்தை அமைதியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஹை பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மண்ணை கவ்வும்போது, குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நடிகர், நடிகைகளை வைத்து நுணுக்கமான, மென்மையான விஷயங்களை 24 வயதே ஆன இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் பதிவு செய்திருக்கிறார்.. உலக அளவில் இந்த படம் அனைவருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தரும்.. அனைத்து விருதுகளுக்கும் தகுதியுடைய படம்.












Click it and Unblock the Notifications