ஏவிஎம் ராஜனுக்கு விடிகாலையில் கேட்ட அந்த குரல்.. "தப்பா யோசிக்காதே, இயேசு காப்பார்": பிரபலம் பேட்டி
சென்னை: பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜன், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு எப்படி மாறினார்? இவர் சொந்தமாக படம் எடுத்து, கடனாளியாக தவித்தது எப்படி? என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது, "ஏவிஎம் ராஜன் இயற்பெயர் சண்முக சுந்தரம்.. இவர் ஒரு தீவிரமான சிவபக்தர்.. இந்து மத ஆன்மீகத்தில் அளவுகடந்த பற்றை கொண்டவர். புதுக்கோட்டையை சேர்ந்தவர்.. ஆனால், திருச்சியில் ஒரு கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தார்.

முன்னணி நடிகர்: சினிமா வாய்ப்பு தேடி சென்னை வருகிறார்.. பல படங்களில் படித்து மக்களின் மனதில் இடம் பெற்றவர்.. முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர்.. தேவர் பிலிம்ஸின் ஒட்டுமொத்த குத்தகைதாரர் ஏவிஎம் ராஜன்.. சாமி படம் என்றாலே அது ஏவிஎம் ராஜன் என்றாகிவிட்டது..
அதிர்ந்தே பேசாத குணம் கொண்ட ஏவிஎம் ராஜன், தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.. ஒருகட்டத்தில் படம் வாய்ப்பு இல்லாமல் போகவும், சொந்தமாக படம் எடுத்தார்.. ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை.. ஒரே படத்தை எடுத்து, தன்னுடைய நிலம், பங்களா, கார், பண்ணை வீடு எல்லாவற்றையும் இழந்துவிட்டார்.. 1980களியே 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.. இப்போது இதன் மதிப்பு 400 கோடி ரூபாய்க்கு சமம்.
இழந்த சொத்துக்கள்: ஆனால், இழந்த சொத்துக்களை ஏவிஎம் ராஜனால் மீட்க முடியவில்லை.. அளவுக்கு அதிகமான கடன் தொல்லையில் சிக்குகிறார். கந்துவட்டிக்காரர்கள், ஒவ்வொருவராக பணம் கேட்டு ஏவிஎம் ராஜன் வீட்டுக்கு படையெடுக்க வந்துவிட்டார்கள்.. இதனால், வீட்டிற்குள் குழப்பம் ஆரம்பமாகிறது.. எனவே, வீட்டில் தங்க முடியாமல், ஓட்டலுக்கு சென்று தங்கும் நிலைமை ஏற்பட்டது. அதுவும் நடுத்தர ஓட்டலில் சென்று தங்குகிறார். இதனால், பல மாதங்களாகவே வீட்டுக்கே வராமல் இருந்தார்..
ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, தன்னுடைய வீட்டுக்கு கிளம்பி வந்தார். மறுநாள் காலை 4 மணிக்கு விஷம் குடித்து இறந்து விடலாம் என திட்டமிட்டார். அன்றைய இரவு முழுவதும் தூங்கவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக கடவுளை கும்பிட்டு அழுதுகொண்டேயிருந்தார்.. சரியாக விடிகாலை 4.30 மணிக்கு கடவுளை தியானம் செய்தார்.. அப்போது திடீர்னு ஒரு குரல், "தப்பா யோசிக்காதே, உன்னை ஏசு காப்பார்" என்று குரல் ஒலித்தது.
பூஜையறை: அந்த குரல், தனக்கு பள்ளியில் பாதுகாப்பாக இருந்த பாதிரியாரின் குரல் என்பதை உணர்ந்தார் ஏவிஎம் ராஜன்.. உடனே பதறிப்போய், பூஜையறையில் தேடி பார்த்தார்.. வீடு முழுக்க தேடிப்போய் பார்த்தார்.. ஆனால், வீட்டிற்குள் யாருமே இல்லை..
இதனால் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்துவிட்டார்.. அப்போது சிறிது நேரத்தில் கடன்கொடுத்த கடன்காரர் ஒருவர் வீட்டுக்கு வந்து, "ராஜன், கவலைப்படாதே, நீ எனக்கு தரவேண்டிய பணத்தில் பாதியை கொடு போதும். தப்பான முடிவை எடுக்காதே" என்று சொல்லிவிட்டு போனார்.
மந்தைவெளி சர்ச்: அதாவது, அதுவரை கொடுமையாக பேசியவர்கள் எல்லாம், இதற்கு பிறகு மென்மையாக ஏவிஎம் ராஜனிடம் பேச துவங்கிவிட்டார்கள். இதற்கு பிறகுதான், தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த விஷமருந்தை தூக்கி எறிகிறார். நேராக மந்தைவெளி சர்ச்சுக்கு சென்று, இயேசுவிடம் தன்னை ஒப்படைக்கிறார். இயேசுவின் புகழை பரப்ப துவங்கினார்" என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.


Click it and Unblock the Notifications
