பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.. ஜனகராஜ் மனைவி யார் தெரியுமா? 5 வருட காதல்.. தற்போதைய நிலை இதுதானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ஜனகராஜ் பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பேசி இருக்கிறார்.

நடிகர் ஜனகராஜ் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய தனித்துவமான டயலாக்குகள் ரசிகர்களின் மத்தியில் இப்போதும் பிரபலமாக இருந்து வருகிறது.

Famous actor Janakaraj Current Status and he love story

அந்த வகையில் இப்போதும் பல கணவர்மார்கள் மனைவி ஊருக்கு போனதும் ஸ்டேட்டஸில் வைக்கப்படும் "பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்ற வசனத்திற்கு சொந்தக்காரர் தன்னுடைய மனைவி குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் ஜனகராஜ் 100க்கும் மேற்பட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரிலும், குணசித்திர கேரக்டரிலும் நடித்து பிரபலமானவர் தான். இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் முக்கியமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சிந்து பைரவி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றதாக இருக்கும். அதுபோல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்திலும் ரஜினிகாந்தின் உற்ற நண்பனாக நடித்திருப்பார்.

இவர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் "பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா"," தங்கச்சிய நாய் கடிச்சுட்டுச்சுப்பா" என்ற வசனங்கள் இப்போதும் பேமஸ் ஆக இருக்கிறது. அதுபோல நடிகர் ஜனகராஜ் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் பள்ளிக்கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார். அதற்கு பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து பேசி இருக்கிறார். அப்போது நான் பேசியதில் இப்போதும் பேமஸ் ஆக இருக்கும் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற டயலாக் உருவான விதம் நாங்கள் அந்த நேரத்தில் நண்பர்கள் எல்லாரும் ஒரு அறையில் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த டயலாக்கை பலர் சொல்லுவார்கள். அப்பாடா என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா. நம்ம ஜாலியா இருக்கலாம் அதாவது சரக்கு அடிக்கலாம் என்று அப்போது சொல்லிக் கொண்டிருப்போம். அதை தான் அந்த திரைப்படத்தில் பேசி இருந்தேன் அது இப்ப வரைக்கும் பேமஸ் ஆக இருக்கிறது.

Famous actor Janakaraj Current Status and he love story

அதுபோல என்னுடைய மனைவி பெயர் மாலதி. அவங்களோட தாத்தா பாட்டி பிஜி ஐலண்ட்டில் செட்டில் ஆயிட்டாங்க. அப்போ என் மனைவி அங்க இருந்து இங்க தேனாம்பேட்டையில் எஸ் ஐ டி க்கு படிக்க வந்தாங்க. அப்போ அவங்க அங்க ஹாஸ்டலில் தங்கி தான் படிச்சிட்டு இருந்தாங்க. அந்த ஹாஸ்டலுக்கு பக்கத்துல தான் எங்க வீடு. எங்க வீட்டில் இருந்து அப்போ ஹாஸ்டலில் இருக்கும் எல்லா பொண்ணுங்களுக்கும் நாங்கள் கை காட்டுவோம்.

அப்போது அங்கு இருக்கும் பெண்கள் எங்ககிட்ட சைகை மொழியில் பேசி நாங்க பிரண்டா ஆகி இருக்கோம். அந்த நேரத்தில் என் மனைவியும் பேசுவாங்க. அப்போ நீங்க யாரு? நீங்க என்ன பண்றீங்க? படிக்க போலாமே என்று எங்களை கிண்டல் பண்ணுவாங்க. அதற்கு நாங்க அது தான் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்து இருப்போம்.

அப்படியே போய்கிட்டு இருந்து, அஞ்சு வருஷம் நாங்க இப்படித்தான் பேசிகிட்டு இருந்தோம். பிறகு வீட்டில் சொல்லி ரெண்டு வீட்டின் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப எங்களுக்கு ஒரு பையன் இருக்கான். ஆனால் நாங்க அந்த காலத்தில் சைகை மொழியில் தான் அதிகமாக பேசிக்கொண்டோம். இப்போதும் என்னுடைய மனைவி என்னை விட்டுக் கொடுக்கிறது கிடையாது. ரொம்ப பாசமா பார்த்துக்கிறாங்க. இதுவரைக்கும் எங்களுக்குள்ள சண்டை வந்ததே கிடையாது.

Famous actor Janakaraj Current Status and he love story

நான் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற டயலாக் பேசி பிரபலமான நேரத்தில் கூட என்னுடைய மனைவி இப்படியும் மனசுக்குள் இருக்கா என்று சிரித்துக் கொண்டார். வேறு எதுவும் சொல்லவில்லை. நான் என்னைப் பற்றி இப்போ பல வருடங்களாக பல வதந்திகள் பரவிக் கொண்டிருப்பதால் எந்த பேட்டிகளும் கொடுப்பதில்லை. நான் வெளிநாட்டில் இருக்கிறேன், அமெரிக்காவில் இருக்கிறேன், நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கிறேன் என்றெல்லாம் என்னைப் பற்றி பலர் அவதூறாக வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை கிடையாது. நான் சென்னையில் தான் பல வருடங்களாக இருக்கிறேன்.

என்னைப் போலவே என்னுடைய மனைவியும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது கிடையாது. அவர் மீடியா முன்பு முகத்தை காட்ட விரும்புவதில்லை. இப்போது எனக்கு 60 வயது ஆகிறது. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலருக்கும் போன் செய்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் யாருடைய வீட்டிற்கும் அதிகமாக போவது கிடையாது என்று நடிகர் ஜனகராஜ் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+