எல்லாமே கட்டுக்கதை.. காதில் வந்த வலியால் வந்த வினை.. முதல் முறை மனம் திறந்த நடிகர் ஜனகராஜ்
சென்னை: பிரபல நடிகர் ஜனகராஜ் பல வருடங்கள் கழித்து முதல் முறையாக தன்னுடைய நிலைமை குறித்தும் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகள் குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகர் ஜனகராஜ் கடைசியாக 96 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் அது குறித்தும் அதில் ஜனகராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பலர் செய்தி சேனல்களில் தன்னை பற்றி தவறாக செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள் என்றும் அது குறித்து பல்வேறு கேள்விகளையும் ஜனகராஜ் எழுப்பி இருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் 70, 80களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் ஜனகராஜ் இப்போது அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இவர் முதல் முதலில் செய்தது நடிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வயலின் இசையை கற்றுக் கொண்டதுதான்.
வயலின் இசையை முறைப்படி கற்றுக் கொண்ட ஜனகராஜ் அதற்குப் பிறகு நடிப்பிற்காக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் அவருடைய முகத்தில் விபத்திற்குள்ளாகி முகவாதம் ஏற்பட்டு அந்த நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு அதற்கு கரண்ட் ஷாக் வைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளான நேரத்தில் பலர் இவரிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் முகம் தான் அழகு அதனால் உன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று இவரிடம் அனுதாபமாக கேட்டிருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய குறையும் நிறையாக காட்டி தன்னுடைய தனித்துவம் காரணமாகவே ஜனகராஜ் பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதனாலேயே புகழின் உச்சத்தில் பல முன்னணி நடிகர்களோடு இவர் நடிக்காத திரைப்படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலகட்டத்தில் இவர் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு இவர் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதனால் சமூக வலைத்தளத்தில் இவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்றும் அமெரிக்காவில் யாரும் இல்லாமல் தனியாக திரிந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் இவரைப் பற்றி தவறாக பல செய்திகள் பரவி வந்திருக்கிறது.
இந்த நிலையில் அது குறித்து முதல்முறையாக சமீபத்தில் பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி எழுதி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னை பற்றி கட்டுக் கதைகள் பல பரவி வந்தது. ஆனால் நான் அமெரிக்காவுக்கு போகவும் இல்லை. என்னிடம் விசா கூட கிடையாது. நான் எப்படி அமெரிக்காவுக்கு போக முடியும். எல்லாமே அவர்கள் இஷ்டத்துக்கு எழுதி விட்டார்கள் எனக்கு அது கொஞ்சம் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
நான் சென்னையில் தான் பல வருடங்களாக இருக்கிறேன். இது தெரியாமல் ஒவ்வொருவரும் நான் அமெரிக்காவில் இருக்கிறேன். அங்கே இருக்கிறேன் இங்கே இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் கடைசியாக நடித்தேன். அதற்குப் பிறகு எனக்கு தகுந்த கேரக்டரில் எந்த வாய்ப்பும் வரவில்லை.

அதனால் தான் நான் மீண்டும் நடிக்கவில்லை. இப்போதும் சரியான வாய்ப்பு வந்தால் நான் நடிக்க தயாராக தான் இருக்கிறேன்.
இப்போது சூழ்நிலையில் எனக்கு காதில் ஒரு சின்ன வலி இருந்தது. அதற்கு ஹாஸ்பிடல் போய் பார்த்ததில் அவர்கள் காதில் கொஞ்சம் கிளீன் பண்ண வேண்டும் என்று செய்தார்கள் அந்த ஒன்று மட்டும் தான் எனக்கு பிரச்சனையாக இருக்கிறது.
தவிர வேறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் சந்தோஷமாகவும் இருக்கிறேன். ஆனால் என்னை பற்றி தவறாக பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவெல்லாம் உண்மை இல்லை என்று நடிகர் ஜனகராஜ் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் அவரை அதிகமாக மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications