நடிகர் டெலிபோன் சுப்பிரமணி.. 50+ படத்தில் நடித்தாரே? விவேக் கூட காமெடி சீனில் பார்த்திருக்கீங்களா?
சென்னை: தமிழ் சினிமாக்களில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் டெலிபோன் சுப்பிரமணி... இவருக்கு இந்த பெயர் வர என்ன காரணம் தெரியுமா? சமீப நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.. சுப்பிரமணி யார் தெரியுமா?
காமெடி நடிகர்கள் விவேக், வடிவேலு போன்றோருக்கு தனித்தனி குழுவினர் உண்டு.. விவேக் டீம், வடிவேலு டீம் என்றே இந்த நகைச்சுவை நடிகர்களும் அழைக்கப்பட்டனர்..

காமெடி கேரக்டர்
விவேக்குடன் நடித்தவர்கள், வடிவேலுவுடன் இணைந்து காமெடி டிராக் செய்வதில்லை.. அதேபோல வடிவேலு குழுவினர், விவேக்குடன் இணைய மாட்டார்கள். மயில்சாமி போல ஒருசிலர் இதில் விதிவிலக்கு உண்டு.. இருவரிடமுமே சேர்ந்து நடிப்பார்கள்..
இதில் டெலிபோன் சுப்பிரமணி என்பவர், விவேக்குடன் நீண்ட காலமாகப் பயணித்தவர்.. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் காமெடி கேரக்டரிலேயே நடித்து பெயர் பெற்றவர் காமெடி சுப்பிரமணி..
விவேக் படங்கள்
குறிப்பாக, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, யுனிவர்சிட்டி, எலி போன்ற திரைப்படங்களில் சப்போர்ட்டிங்க கேரக்டர்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் விவேக்குடன் ஹோட்டல் காமெடி சீனில் சுப்பிரமணி நடித்திருந்தது, அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததுடன், ரசிகர்களின் கவனத்தையும் பெற்றிருந்தது..
பிறகு வடிவேலுவுடனும் சேர்ந்து நடித்தார் என்றாலும், விவேக்குடனேயே நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.. விவேக் மறைவுக்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை..
பெயர்க்காரணம்
சினிமாவில் நுழைவதற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியதால், டெலிபோன் சுப்பிரமணி என்று இவர் அழைக்கப்பட்டிருக்கிறார். நல்ல வேலை கிடைத்தும்கூட, சினிமா மீதான ஆர்வத்தால் படங்களில் நடிக்க வந்துவிட்டார். ஆனால், காமெடி, துணை வேடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
இப்போது டெலிபோன் சுப்பிரமணிக்கு 67 வயதாகிறது.. சென்னையில் வசித்து வந்த சுப்பிரமணிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. சிகிச்சை மேற்கொண்டு வந்தபோதும், உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.. இதையடுத்து, சென்னையில் அவர் காலமானார். திருவல்லிக்கேணி பகுதியில் வீடு உள்ளதால், அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
நினைவுகள் பகிர்வு
திரையுலகை சேர்ந்த கலைஞர்களும், ரசிகர்களும், அந்த பகுதி மக்களும், நடிகர் டெலிபோன் சுப்பிரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்..சுப்பிரமணியுடன் நடித்த நடிகர்கள், அவரது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
உயிரிழந்த நடிகர் சுப்பிரமணி, தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்திருக்கிறார் .. ஏற்கனவே கலையுலகில் அடுத்தடுத்த உயிரிழப்புகள் நடந்து வருவது பெரும் கவலையை உண்டுபண்ணி வருகிறது.. குறிப்பாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், டெலிபோன் சுப்பிரமணியனின் மரணமும் பெரும் சோகத்தை உண்டுபண்ணி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications