உடைந்த பாரதிராஜா.. மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, சுயநினைவும் இல்லயா? எப்படி இருக்காரு
சென்னை மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். மனோஜின் உயிரிழப்பு மொத்த பேரையும் அதிர்ச்சியடைய வைத்தது.. குறிப்பாக, பாரதிராஜாவை மிகவும் உலுக்கியெடுத்துவிட்டது. இந்நிலையில், பாரதிராஜா தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
திறமைசாலிகளை தேடி சென்று பாராட்டக்கூடியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.. புத்திர சோகத்திலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறாரோ தெரியவில்லை என்று சினிமா பிரபலங்கள் அப்போதே தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

மனோஜ் இறந்த அடுத்த சில நாட்களில், சோக நினைவுகளில் மூழ்கிகிடந்த பாரதிராஜாவை மீட்டெடுக்கவே கங்கை அமரனும் முயற்சித்தார். பாரதிராஜாவை நேரில் சென்று சந்தித்து, சிறுபொன்மணி உட்பட பல பாடல்கள் பாடி காட்டினார்.. இது தொடர்பான வீடியோவும் அப்போது வெளியாகியிருந்தது..
மனோஜ் பாரதிராஜா
ஆனாலும் பாரதிராஜாவின் சிந்தனை முழுவதும் மகன் நினைப்பிலேயே கிடந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.. அப்பப்போ மட்டுமே, பாரதிராஜாவுக்கு பழைய நினைவுகள் வந்து சென்றதை பார்க்கவே கஷ்டமாக இருப்பதாக இணையவாசிகளும் வேதனை தெரிவித்திருந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், பாரதிராஜா சகோதரர் ஜெயராஜை பேட்டி எடுத்திருந்தார். அதில் பாரதிராஜா இப்போது எப்படி இருக்கிறார்? என்பது குறித்து விசாரித்தார்.
ஞாபக மறதியில் இயக்குனர் இமயம்
அதற்கு ஜெயராஜ், "மகன் நினைவில் எப்போதும் கண்ணீர் வடித்து வருகிறார்.. 3 வருஷங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை.. இப்போது மனவேதனையால் இன்னும் சோர்ந்துவிட்டார். அவரது உடல் நிலை மற்றும் மகன் பற்றிய நினைவுகள் வரக்கூடாது என்பதற்காகவே, சினிமா துறையை சேர்ந்த யாரையும் நாங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை. மகனின் நினைவால் தன்னுடைய நினைவாற்றலை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்.
ஒருநாள் என் அண்ணன் பாரதிராஜா, என் கையை பிடித்து கொண்டு, உன்னை நான் என்னுடைய படங்களில் 10 - 15 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி இருந்தால், இன்று நீயும் ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பாய்... ஆனால் நான் அதை செய்ய தவறிவிட்டேன்... என்னை மன்னித்துவிடு என்று அழுதார் என்று கண்கலங்கி சொல்லி உள்ளார்.
மனோஜ்ஜின் நினைவுகள்
இந்நிலையில், Frontvoods TV என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "பாரதிராஜாவுக்கு இப்போது ஞாபக சக்தி இல்லை..
ஞாபக மறதியில் இருக்காரு.. பாரதிராஜா தங்கியிருக்கும் பங்களாவில் யாருக்குமே அனுமதி இல்லை.. அங்கே அவரை தனியாக மருத்துவர், நர்ஸ் வைத்து கவனித்து கொள்கிறார்கள்.. எனினும் மகன் மனோஜ்ஜின் போட்டோவை பார்த்துவிட்டு, அப்படியே தலையை தொங்க போட்டுக் கொண்டு அழுகிறார்.. வேளா வேளைக்கும் சரியாக சாப்பிடுகிறாரா என்றுகூட தெரியவில்லை..
பாரதிராஜாவை பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை.. காரணம், யாராவது சென்றால் அவர்களை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுகிறாராம்.. அது இன்னும் அவருக்கு பிரஷரை அதிகமாக்கிவிடும் என்பதால், யாரையுமே சந்திக்க விடுவதில்லை..
உடைந்த பாரதிராஜா
மனோஜ் இறந்ததுமே அவரது சகோதரி ஜனனி, தன்னுடைய அப்பா பாரதிராஜாவை மலேசியாவிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று கவனித்து கொண்டார்.. அங்கே தங்கியிருந்தபோதும், யாருடனும் பாரதிராஜா பேசவில்லை.,. 4 மாதம் கழித்து, ஊருக்கே கிளம்பி செல்வதாக சொல்லிவிட்டு, இங்கே வந்துவிட்டார்.. இப்போதும் அந்த நிலைமையில்தான் உள்ளார்..
இந்த தகவல்களை எல்லாம் பாரதிராஜாவின் உடன்பிறந்த தம்பி ஜெயராஜ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.. அதில் ஜெயராஜ் சொல்லும்போது, "இப்பவே என் அண்ணனை பார்க்கும்போது எனக்கு அழுகை அழுகையாக வருது.. சித்தப்பான்னு சொல்லி மனோஜ் சின்ன வயசில என் மேல வந்து விழுவான்.. நான் அவனை பையனை போலவே வளர்த்தேன்.. நானும் அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை.. நானும் அழுகிறேன், என் அண்ணனும் அழுகிறார் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications