கேப்ரில்லா நொந்துட்டாங்க.. இரவெல்லாம் அழுது.. அம்மாவிடம் அடி வேற.. "ஒருவரை குறை சொல்ல கூட்டமே உண்டு"
சென்னை: "நான் ஒல்லியாக இருக்கும்போதும் ட்ரோல் பண்ணாங்க.. இப்போது வெயிட் போட்டுட்டேன். இப்போதும் ட்ரோல் செய்றாங்க.. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஒருத்தரை குறைகண்டுபிடிக்க ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா தெரிவித்துள்ளார்.
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா... விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்.. ஜோடி நம்பர் ஒன் 6வது சீசனில், டைட்டில் வென்றவர். பிறகு, அதே விஜய் டிவியில், "7 C" என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

பிறகு பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.. அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியபோது, கேப்ரில்லாவின் துணிச்சலான முடிவை ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள்..
இப்போதும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.. ஈரமான ரோஜாவே சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள், போன்ற சீரியல்களில் நடித்து நடித்து, பெண்களின் பேராதவை பெற்று வருபவர்.
வீடியோக்கள்: சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட கேப்ரில்லா, அடிக்கடி தன்னுடைய நடன வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவது வழக்கம். சமீபத்தில் பேட்டி ஒன்றில், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து கேப்ரியல்லா கூறியிருந்தார்.. அதில் அவர், "நான் 10ம் வகுப்பு படிக்கும்போது அந்த சமயத்தில் என்னிடம் செல்போன் இல்லை.. அதிகம் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தேன். அப்போது, என்னுடைய போட்டோவை மார்பிங் செய்து விட்டனர்.
அந்த போட்டோவில் இருந்தது நான் இல்லை. ஒருவேளை நானா இருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு அந்த போட்டோ என்னை போல் இருந்தது. இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது.. 3 நாட்கள் ஸ்கூலுக்கு போகவில்லை.. பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள். அந்த சமயங்களில், மிகவும் கஷ்டப்பட்டேன்" என்று கேபிரில்லா வருத்தத்துடன் கூறியிருந்தார்.
மார்பிங் போட்டோ: இந்நிலையில், கலாட்டா பிங்க் யூட்யூப் சேனலுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார் கேப்ரியல்லா.. அந்த பேட்டியிலும் தன்னுடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது குறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
அந்த பேட்டியில், "நான் ஒல்லியாக இருக்கும்போதும் ட்ரோல் பண்ணாங்க.. இப்போது வெயிட் போட்டுட்டேன். இப்போதும் ட்ரோல் பண்றாங்க. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒருத்தரை குறைகண்டுபிடிக்க ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
கமெண்ட்: என் உடம்பினை நான் தேர்ந்தெடுக்க முடியாது. எனக்கு இந்த மாதிரி உடல்வாகு வந்திடுச்சு. நான் சாதாரண ட்ரெஸ் போட்டாலும், மாடர்ன் ட்ரெஸ் போட்டாலும் எல்லாத்துக்கும் கமெண்ட் செய்கிறார்கள். எல்லாவற்றையும் ஆபாசமாகவே பார்க்க பலர் இங்கே உண்டு. ஆனால், நான் யாரையும் கண்டுக்கறது இல்லை. எந்த கமெண்ட்டையும் படிப்பதும் இல்லை.
நான் 10வது படிக்கும்போது, என் போட்டோவை மார்பிங் பண்ணி போட்டு, வைரல் ஆனது. வீட்டில் என் அம்மா செம அடி.. நான் ஸ்கூல் போகாமல் 3 நாட்கள் தூங்காமல் அழுதேன்.
வேதனை: என்னுடைய அம்மா, அந்த மார்பிங் செய்த போட்டோ பற்றி என்னுடைய ஸ்கூல் பிரின்ஸிபலிடம் சொன்னார்.. என்னுடன் படித்தவர்களே சிலர் அந்த மார்பிங் போட்டோவை நம்பினார்கள்.. ஆனால், உண்மையான நண்பர்கள் அப்படி எதுவும் நினைக்கல. அதற்கு பிறகுதான் இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்யணும்னு தைரியம் எனக்கு வந்தது என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் கேப்ரியல்லா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications