வாழ்க்கை ஒரு வட்டம் “திமிராக பேசிய கோபி”பதிலடி கொடுத்த பாக்யா.. இப்பவாவது இந்த முடிவை எடுத்தீங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பேச்சுக்கு பாக்யாவின் பதிலடி குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கோபிக்கு ராதிகாவோடு திருமணம் நடக்குமா இல்லையா என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் தற்போது பாக்யாவின் முடிவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

திருமண மேடையில் இருக்கும் கோபி தன்னுடைய அப்பாவை எகத்தாளமாக பேசியதை பார்த்த பாக்யா இப்படி ஒரு பதிலடி கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.

சுய கௌரவத்துக்காக போராட்டம்

சுய கௌரவத்துக்காக போராட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்ப முதலில் பெண்களின் வரவேற்பையும் கிண்டல்களையும் ஒரு குடும்பத் தலைவி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடும் கதைக்களமாக தான் இந்த பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. குடும்ப தலைவியாக இருக்கும் பாக்கியா அவருடைய கணவன், மாமியார், பிள்ளைகள் என பலரும் உதாசீனப்படுத்துவதால் அவர் தன்னுடைய சுய கவுரவத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

தெரிய வந்த ரகசியம்

தெரிய வந்த ரகசியம்

பாக்கியலட்சுமிக்கு திருமணம் முடிந்து 25 வருடங்கள் ஆகின்றன. இதில் அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது. தற்போது முதல் மகனுக்கு திருமணமும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் பாக்கியாவின் கணவரான கோபி திருமணம் செய்ய இருக்கிறார். அதுவும் பாக்யாவின் நெருங்கிய தோழியான ராதிகாவை. இது ஆரம்பத்தில் பாக்கியத்திற்கு எப்போது இந்த விஷயம் தெரியும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வந்தனர். அந்த சில வாரங்கள் இதில் பெரிய ட்விஸ்ட் வைத்து ஒளிபரப்பி வந்தனர்.

விரட்டப்பட்ட கோபி

விரட்டப்பட்ட கோபி

தற்போது கோபிக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அப்போது பாக்கியாவை வீட்டை விட்டு போக சொல்லி கோபி திட்டிய போது, கோபியை பாக்கியா வீட்டை விட்டு விரட்டி விட்டார். காரணம் அந்த வீடு பாக்கியவின் பெயரில் இருப்பதால் தான். இந்த நிலையில் கோபி தனக்கு பிடித்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இந்த நிலையில் கோபியின் அப்பாவுக்கு கோபியின் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விடுவேன் என்று சபதம் எடுத்து மண்டபத்திற்குள் வந்து இருக்கிறார்.

பாக்யாவின் பதிலடி

பாக்யாவின் பதிலடி

கோபியிடம் இந்த வயசில் உனக்கு திருமணம் தேவையா? உன் பிள்ளைகள் பார்த்தால் உன்னுடைய நிலைமை என்ன என்று பல்வேறு வசனங்களை பேசி இருக்கிறார். அதற்கு கோபி விவாகரத்து பெற்றதும் நீங்களும் உங்கள் மருமகளும் சேர்ந்து என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டீர்களே? இப்போது வந்து, என்ன முகத்தை வைத்து என்னிடம் பேசுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். திமிராக கோபி பேசிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இப்போது உங்களுக்கு தெரிகிறதா? அன்னைக்கு என்னை வீட்டை விட்டு உங்க மருமகள் அனுப்பும்போது நீங்க பார்த்துக்கொண்டு தானே இருந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாக்யா கோபமாக இன்று உங்க அப்பாவை பேசுவதை பார்த்து நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், இதே போல நாளை உங்க பிள்ளைகள் உங்களிடம் பேசும் போது அதற்கு தயாராக இருந்துக்கோங்க.!! என்று பேசி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் பேசிய இந்த டயலாக்கு ரசிகர்கள் இப்பவாவது கோபியை எதிர்த்து பேசுவதற்கு பாக்கியாவிருக்கு தெரிந்தது. இந்த முடிவை நீங்க எப்பவோ எடுத்து இருந்தா இந்த நிலைமை வந்திருக்காது என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+