“தங்கத்தாமரை மகளே” டான்ஸ் ஆடிய சினேகா.. இடுப்பில் கை வைத்த நாகராஜ்.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடிகை சினேகா நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சினேகா நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவரோடு டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் சினேகாவோடு டான்ஸ் ஆடும் போட்டியாளரை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடுவராக இருக்கும் பிரபலங்கள் போட்டியாளர்களை என்கரேஜ் செய்வதற்காக அவர்களோடு டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது என பல என்டர்டைன்மென்ட் விஷயங்களை செய்வது வாடிக்கைதான். அந்த மாதிரி தான் சமீபத்தில் கூட நடிகை சினேகா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த நாகராஜ் என்ற போட்டியாளரை பாராட்ட அதற்கு அவர் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது நீங்கள் என்னோடு டான்ஸ் ஆட வேண்டும் என்று நான் ரொம்பவே ஆசைப்படுகிறேன் என்று சொல்ல அதற்கு சினேகாவும் அவரோடு சென்று டான்ஸ் ஆடியிருக்கிறார்.

அப்போது "தங்க தாமரை மகளே" என்ற பாடலுக்கு நாகராஜுடன் சினேகா டான்ஸ் ஆடும் போது சினேகாவின் இடுப்பில் நாகராஜ் கைவைத்தபடி அந்த பாடலுக்கு ஸ்டெப் போட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் இதை பார்த்ததும் அதிர்ச்சியான ரசிகர்கள் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் இப்படியா கண்ட இடத்தில் கை வைத்து டான்ஸ் ஆட வேண்டும் என்று சிலர் கமெண்ட்களில் கொந்தளிக்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று புலம்பி கொண்டிருக்கின்றனர். நடிகை சினேகா பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதிகமான கவர்ச்சி காட்டாத நடிகையாகவே நடித்திருந்தார். அதிலும் ஆரம்பத்தில் அவர் நடித்த ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா போன்ற பல திரைப்படங்களில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
அதிலும் நடிகை நதியாவிற்கு பிறகு இவர்தான் ஹோம்லியான நடிகை என்றெல்லாம் பலரும் கூறி வந்தனர். அது போல இவருடைய சிரிப்புக்கு பல ரசிகர்கள் அடிமையாகிவிட்டனர். அதனாலேயே இவருக்கு "புன்னகை அரசி" என்ற பட்டப்பெயரையும் கொடுத்திருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சினேகா நடித்த கேரக்டர் காரணமாகவே இவருக்கு அதிகமான சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இப்போது முக்கிய கேரக்டரில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஜீ தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். அதிலும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடிகை சினேகா பாபா பாஸ்கர், நடிகை சங்கீதா கிரீஸ், உடன் இவரும் நடுவராக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோட்டில் நாகராஜ் என்ற போட்டியாளர் டான்ஸ் ஆடி முடித்த பிறகு அவரை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது சினேகாவிடம் மேடம் நான் உங்களோடு ஒரு முறை டான்ஸ் ஆட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்ல,
அதற்கு பாபா பாஸ்கர் இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல... அதே தங்க தாமரை பாடலுக்கு சினேகா மேடம் இப்பவும் கூட டான்ஸ் ஆடுவாங்க. அதுவும் பாரு அது பாட்டுக்கு ஏத்த மாதிரி தான் இன்னைக்கு ஜிகு ஜிகுனு அவங்களும் டிரஸ் போட்டு இருக்காங்க என்று சொல்லி, சினேகாவை கோர்த்து விட, அதற்கு சினேகா நாகராஜ் நான் உங்களுக்காக உங்க கூட சேர்ந்து டான்ஸ் ஆடுகிறேன் என்று சொல்லி அவருடன் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
அப்போது சினேகா புடவை கட்டி இருக்கும் நிலையில் அவருடைய இடுப்பில் கைவைத்து நாகராஜ் டான்ஸ் ஆடி முடிக்கும் போது சினேகாவை கட்டிப்பிடித்து ஸ்டெப் போட்டு இருக்கிறார். இதை பார்த்த பொறாமையில் ரசிகர்கள் நாகராஜை திட்டியபடி இந்த புகைப்படங்களை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications