பாரதிகண்ணம்மா 2இல் ஜீ தமிழ் முன்னணி கதாநாயகியும் இருக்கிறாரா? வெளியான புகைப்படங்கள்
பாரதிகண்ணம்மா 2 சீரியலில் ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீசன் இரண்டில் ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியல் கதாநாயகி ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த அதே வினுஷா தேவி தான் கண்ணமாவாக நடிக்கிறார்.
கண்ணம்மாவின் தோழியாக ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மகிழ்ச்சியான முடிவு
விஜய் டிவியில் வரும் எதிர்பார்ப்பையும் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களையும் ஆரம்பத்தில் இருந்து பெற்ற சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த சீரியலின் முடிவு பல ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்துவிட்டது. ஆரம்பத்திலிருந்து இந்த சீரியலில் dna டெஸ்ட் என்ற ஒற்றை காரணத்தை மட்டும் வைத்தே சீரியல் இழுத்துக் கொண்டே நான்கரை வருடங்களை கடந்துவிட்ட நிலையில் இந்த சீரியலில் கடைசி முடிவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்ததை தொடர்ந்து இந்த சீரியலை ரசிகர்கள் அதிகமாக மிஸ் பண்ணி வருவதாக கருத்து கூறி வருகின்றனர்.

சீரியல் நடிகர்கள்
இந்த நிலையில் இன்றிலிருந்து பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகன் பாரதியாக ரோஜா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த சிபு சூர்யன் நடிக்கிறார்.
கண்ணம்மாவாக ஏற்கனவே நடித்து வந்த வினுஷா தேவி நடிக்கிறார். இந்த தகவல்கள் ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சீரியலில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி பிரபலமான பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகி ரேஷ்மா முரளிதரனும் நடிக்க இருப்பதாக தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

ஒருவேளை இருக்கலாமோ
இதுவரைக்கும் கதாநாயகியாகவே நடித்து வந்த ரேஷ்மா முரளிதரன் இந்த இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருக்கிறாரா? அல்லது ஏதேனும் கெஸ்ட் ஆக ஆரம்பத்தில் வர இருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரேஷ்மாவின் ரசிகர்களின் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் இதைக் குறித்து இப்ப வரைக்கும் ரேஷ்மா முரளிதரன் எந்த உறுதியான தகவல்களையும் கூறவில்லை என்பதால் இது ஒரு வேலை பொய்யான தகவலாக இருக்கலாமோ என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பதில் சொல்லவில்லையே
ஏற்கனவே ரேஷ்மா முரளிதரன் பூவே பூச்சூடவா சீரியலின் முடிவுக்கு பிறகு கலர்ஸ் தமிழில் அவருடைய காதல் கணவருடன் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டதும் தற்போது எந்த சீரியலிலும் அவர் நடிக்காமல் தான் இருந்து வருகிறார். ஏற்கனவே அவரும் ஷபானாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறி இருந்தனர். ஆனாலும் அந்த திரைப்படத்தைப் பற்றியும் தற்போது எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை நிஜத்தில் பயன்படுத்தி கொள்வாரா? என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications