தன்னுடைய முடிவில் நிலையாக இல்லாமல் மீண்டும் அபிஷேக்கை ஃபாலோ பண்ணும் பிரியங்கா
சென்னை: அண்ணாச்சி விஷயத்தில் நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா நடந்து கொண்டதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தன்னுடைய முடிவில் நிலையாக இல்லாமல் இப்படி புலம்பிக் கொண்டு இருக்கிறாரே என்று பலர் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.
மீண்டும் அபிஷேக் சொல்வதை கேட்க தொடங்கிவிட்டாரா பிரியங்கா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரியங்காவின் தனித்துவம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கியிருக்கும் விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்காவை பலருக்கும் பரிச்சயமாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் இவருடைய பர்பாமன்ஸ் வேற லெவல் என்று இவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்னதான் பிரியங்கா தன்னுடைய தனித்துவத்தோடு விளையாடிக் கொண்டிருந்தாலும் ஒரு சில நேரங்களில் செய்யும் செயல்கள் பலருக்கும் வெறுப்படைய செய்துவிடுகிறது. அந்த மாதிரிதான் தற்போது இவர் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கி அனைவரையும் குழப்பமடைய வைத்திருக்கிறார்.

மீண்டும் தொடங்கிய கூட்டணி
பிரியங்கா இப்படித்தான் என்று ரசிகர்களால் கெஸ் பண்ண முடியாத நிலையில்தான் இவருடைய மனநிலை இருந்து வருகிறது. ஒரு சில நாட்கள் இவர் தன்னுடைய கேரக்டரில் விளையாடிக் கொண்டிருந்தாலும், ஆரம்பத்தில் அபிஷேக் உடன் சேர்ந்த பிறகு இவருடைய விளையாட்டு வேற மாதிரி மாறிவிட்டது என்று ரசிகர்கள் குறை கூறிக் கொண்டிருந்தனர். இதையேதான் கமல் கூறினார். அந்த நேரத்தில் அபிஷேக் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு இவருடைய விளையாட்டு மீண்டும் பழையபடி சூடுபிடிக்க தொடங்கி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அபிஷேக் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

ரசிகர்களின் சந்தேகம்
அபிஷேக் மீண்டும் வந்ததுமே பிரியங்காவின் ரசிகர்கள் இனியாவது அபிஷேக் உடன் சேராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் கமல் முன்னிலையில் நேரிடையாக கூட வீடியோ காலில் அபிஷேக் வருவதற்கு முன்பு இருந்த பிரியங்கா வேறு என்று ஒரு ரசிகர் பிரியங்கா விடமே கூறியிருந்தார். இதற்குப் பிறகு மீண்டும் பிரியங்கா கூட்டணியோடு விளையாட தொடங்கிவிட்டார் என்று பலர் தங்களுடைய சந்தேகங்களைக் கமெண்ட்களாக பரப்பி வருகின்றனர்.

பிரியங்காவின் நிலை இல்லாத முடிவு
நேற்றைய எபிசோட்டில் இந்த வார தலைவர் பதவிக்கான போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதில் ஆரம்பத்தில் அண்ணாச்சிக்கு சப்போர்ட் செய்து, அவர் இதுவரைக்கும் வீட்டில் நிர்வாகத்தை ஏற்கவில்லை அதனால் அவர் தலைவராக வரவேண்டும் என்று கூறிய ப்ரியங்கா அடுத்த நொடி அபிஷேக் தனது முடிவை மாற்றிக் கொள்ளவும் இவரும் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார். இதைப்பார்த்து காண்டான ரசிகர்கள் மீண்டும் பிரியங்கா, அபிஷேக் கூட்டணியை தொடங்கிவிட்டார்களா என்று சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications