டுபு டுபு....வென புல்லட்டில் பறந்து வந்த ரச்சிதாவை பார்த்து.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாற்றம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாமே என்று ....பார்த்தவர்கள் எல்லாம் ஷாக் ஆகுற மாதிரி வீடியோ வெளியிட்ட ரச்சிதாவை பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் கண்ணில் தீப்பொறி பறக்க பறந்து வரும் நெருப்பாக புல்லட்டில் கிளம்பிய ரச்சிதாவை பார்த்து ஷாக்கான ரசிகர்களால் வாவ்...என்று சொல்வதை நிறுத்த முடியவில்லையாம்.

இதுதான் மகிழ்ச்சி என்றால் அதை சந்தோசமாக செய்யலாமென்று முன்னுதாரணமாக ரச்சிதா கையிலெடத்திருக்கும் புது முயற்சியை பார்த்து ஆதரவளிக்கும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே திக்கு முக்காடி போய் விட்டது.

புதிய தோழியுடன் மாஸ்

புதிய தோழியுடன் மாஸ்

மனம் கவலை கொள்ளும் நேரத்தில் இதுதான் என்னுடைய புதிய தோழி என்று புல்லட் பைக்கைகாட்டி கெத் காட்டியிருக்கும் ரச்சிதாவை பார்த்து இவரா இப்படி என்று ரசிகர்களால் கூறாமல் இருக்கவே முடியவில்லை. என்னதான் சீரியலில் படு பவ்வியமாக நடித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் தான் ஒரு சிங்கபெண் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ரச்சிதாஇ தான் புடவையில் மட்டுமல்ல மாடர்ன் உடையிலும் வருவேன் என அடிக்கடி நிரூபித்து வருவார். ஆனால் மாடர்ன் உடையில் வந்தாலும் இவர் ஹோம்லியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். இது வரைக்கும் இப்படியே பார்த்து வந்த ரசிகர்களால் தற்போது இவர் கெத்தாக ஆண்களுக்கு சவால் விடும் வகையில் சாகசம் செய்ததுதான் வேற லெவல் வைரலாக பரவி வருகிறது.

புல்லட்டில் பைங்கிளி

புல்லட்டில் பைங்கிளி

அட தள்ளி போகாதே சாங் பீமேல் வெர்சன் என்று நினைக்க தோன்றுவது போன்று அத்தனை கெட்டப்புகழும் அம்சமாகப் பொருந்த ஒரு ரீல் வீடியோ போட்டுள்ளார் நம்ம சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா. இப்ப தமிழ்நாட்டுல அடிக்கிற வெயிலுக்கு பசங்களே வெளியே தலைகாட்ட பயப்படும்போது நம்ம ரச்சிதா புல்லட்லஇ மொட்டை வெயில்ல அதுவும் ஜெர்கின் போட்டுக்கிட்டு கூலர்ஸ் மாட்டிக்கிட்டு ஜம்முனு அங்க வர்ற ஸ்டைல பார்க்கும்போது வெயிலைக் கூட இவ்ளோ அழகா என்ஜாய் பண்ண முடியுமா!!??என்று நினைக்கத் தோன்றுகின்றது.

சேலை கட்டுன மகாலட்சுமி இல்லை இது

சேலை கட்டுன மகாலட்சுமி இல்லை இது

பெரிய திரையில் விஜயசாந்திஇஜோதிகா போன்று இவரும் சின்னத்திரை ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுக்கப் போகிறாரோ என்னவோ? அதற்கு ஒரு ட்ரெய்லர் காட்டியுள்ளார்இ சேலை கட்டுன மகாலட்சுமி இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு நம்ம தமிழ்நாட்டு ரசிகர்கள் பார்த்து பார்த்து ரசித்த நம்ம ரச்சிதாஇ அவ்வப்போது மாடர்ன் உடைகளில் சில போட்டோக்களை வெளியிட்டு வந்தாலும் கோஸ்ட் ரைடர் போல் புல்லட் ரைடு வந்து ரசிகர்களின் மனதை ஏங்க வைத்து விட்டார். தமக்கு பிடித்த நடிகைகள் இந்த மாதிரி கெத்து வீடியோ போட்டால் நம்ம நெட்டிசன்கள் சும்மா விடுவார்களாஇ கமெண்ட் பாக்ஸ் களில் பயர் எமோஜி போட்டு கொளுத்தி விடுவார்கள் போல...

ரசிகர்களின் அன்புத்தொல்லை

ரசிகர்களின் அன்புத்தொல்லை

அந்த புல்லட் இன்று மோட்சம் அடைந்து விட்டது என்றும்இ இப்பதான் ராயல் என்ஃபீல்டுகே ஒரு புது கெத்து என்றும் இவர் மீது அதீத பாசம் கொண்ட ரசிகர்கள் கொஞ்சம் ஓவர் ஆகவும் புகழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே சார்பட்டா பரம்பரை பட ஆர்யா மற்றும் வாத்தியார் சைக்கிள் ரைடு மீம்ஸ்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்திருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது இந்த ரைடை பார்த்த நம்ம நெட்டிசன் குறும்பர்கள் வாத்தியாரே நாங்க ஒரு ரைட் வரலாமா என்று நக்கலாக கேட்டும் வருகின்றனர்.ரைட் வந்ததெல்லாம் ஓகே பா ஆனா கடைசியில ஒரு சிரிப்போட விட்ட அந்த லுக்கு இருக்கே அதுல விழுந்துட்டோம்பா!! என சில ரசிகர்கள் லைட்டா ஜொல்லு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அதை போடுங்க

முதலில் அதை போடுங்க

இந்த வீடியோவிற்கு அவர் போட்டிருக்கும் என் இனிய தனிமையே பாடலை வைத்துஇஎன்னது தனிமையா!!???? என்று பல்வேறு கோணங்களில் யோசித்து வருகின்றனர்.சினிமா மற்றும் டிவிகளில் ஏதேனும் புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற சீன்கள் வரும்பொழுது திரைகளில் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் வருவது போன்று இந்த மாதிரியான பைக் ரேட் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடும்போது ஏதேனும் விழிப்புணர்வு வாசகங்கள சேர்த்து வெளியிட்டால் அவர்களது ரசிகர்கள் தவறான கோணங்களில் யோசிப்பதையோ செல்வதையோ தவிர்க்கலாம்.. ஏனென்றால் ரட்சிதா பைக்கில் பவனி வரும்போது மாஸ்க் போடாமல் கெத்தாக வீடியோவுக்கு போஸ் கொடுத்தபடி வண்டி ஓட்டுகிறார் என்று சில ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+