Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டத்தை தொடங்கிய குணசேகரன்.. முழுசா அந்நியனாக மாறிய சக்தி..எதிர்நீச்சல் சீரியலில் திடீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைக்களம் ஏற்பட்டிருக்கிறது.

குணசேகரனின் பேச்சைக் கேட்ட தம்பிகள் போடும் ஆட்டத்தை பார்த்து ரசிகர்களை மிரண்டு போயிருக்கிறார்களாம்.

அந்நியனாக மாறிய சக்தி இனி என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று ஆர்வத்தோடு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அண்ணன் தம்பிகளின் கதை

அண்ணன் தம்பிகளின் கதை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. மதுரையை மையமாகக் கொண்ட அண்ணன் தம்பிகளின் கதையாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மதுரையை சேர்ந்த தொழில் அதிபரான குணசேகரனின் குடும்பத்தை பற்றியதாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் அனைவருமே அதிக அளவில் படிக்கவில்லை என்றாலும் அவருடைய மனைவிகள் அனைவரும் படித்த பெண்களாக இருக்கின்றனர்.

மிரட்டலான கேரக்டர்தான்

மிரட்டலான கேரக்டர்தான்

அனைவருக்கும் மூத்தவராக இருக்கும் குணசேகரன் தன்னுடைய தம்பிகள் தன்னை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி சென்டிமென்ட் நாடகம் போட்டு அவர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். கோபத்தை மிரட்டலாக காட்டுவதிலும் சரி, வெறுப்பை சலிப்பாக காட்டுவதிலும் சரி குணசேகரனாக நடிக்கும் மாரி முத்துவை அடிச்சுக்க ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக காட்டி வருகிறார். இவருடைய நடிப்பை பார்த்து பல ரசிகர்கள் நிஜத்திலும் இவர் இப்படித்தான் என்று நேரில் பார்க்கும் போது விலகியே சென்று வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரையும் மிரட்டி வருகிறார்.

குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளும், மூடநம்பிக்கைகளும் அதிகமாக வைத்திருக்கும் குணசேகரன் அவருடைய தம்பிகளை அப்படியே வழி நடத்தி வருகிறார். தன்னுடைய மகள் வயதுக்கு வந்ததும் அவருக்கு நிச்சயம் பேசி முடித்திருக்கிறார். தற்போது அந்த செய்தி சப் கலெக்டருக்கு எதிர்பாராத விதமாக தெரிந்துவிடவே குணசேகரன் மீது ஜனனி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று ஜனனி கூறி வந்ததை கேட்காமல் திருமண ஏற்பாடை நடத்தி வந்ததால் ஜனனி குணசேகரன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். இதனால் தற்போது குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்.

மறுபடியும் அந்நியனாக மாறிய சக்தி

மறுபடியும் அந்நியனாக மாறிய சக்தி

ஏற்கனவே ஜனனியை பிடிக்காத குணசேகரன் எப்படியாவது உன்னிடம் இருந்து என்னுடைய தம்பியை பிரித்து விடுகிறேன் என்று சபதம் போட்டிருந்தார். தற்போது தன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியதை வைத்து குடும்பத்திற்குள் பிரச்சனையை செய்து ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்ற துடித்துக் கொண்டிருக்கிறார். குணசேகரின் பேச்சிக்கு மயங்கிய அவருடைய தம்பிகள் வீட்டில் மனைவியிடம் கோபத்தை காட்டி வருகிறார்கள். எங்க அண்ணனை போலீஸ் ஸ்டேஷன்ல போய் உட்கார வச்சிட்டீங்களே? என்று கோபத்தில் கொந்தளிக்கின்றனர். ஏற்கனவே திடீரென அந்நியனாக மாறும் சக்தி, தற்போது குணசேகரனிடம், இனி ஜனனி எனக்கு மனைவியே கிடையாது. அவளுக்கும் எனக்கு சம்மதம் இல்லை என்று கூறி இருக்கிறார். சக்தி ரூம்பிற்குள் கதவை பூட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். சக்தி எதுவுமே பேசாமல் இருப்பதை பார்த்து இன்று பெரிய பூகம்பம் வெடிக்க போகிறது என்பதை ரசிகர்கள் முன்கூட்டியே கணித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+