பிரச்சனைக்கு தீர்வு இதுதானா?? எதிர்நீச்சல் சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சீரியலாக இருந்தாலும் சரி ரசிகர்களிடம் தைரியத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர கோழைத்தனத்தை அதிகரிக்கக் கூடாது என்பது பலருடைய வாதமாக இருந்து வருகிறது.
பிரச்சனைகள் ஏற்பட்டதும் ரேணுகா தனது அம்மாவையும் தற்கொலை செய்யச் சொல்லி தானும் தற்கொலை செய்து கொள்வதுதான் தீர்வு என்று பேசி இருப்பது ரசிகர்கள் பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
பொதுவாக சீரியல்களில் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் அதிகமானோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சீரியல்கள் பார்த்தால் குடும்பத்திற்கு நல்லது கிடையாது என்பது பல ஆண்களுடைய வாதமாக இருக்கும் நிலையில் தற்போது சீரியல்களில் வரும் சீன்கள் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு சில சீரியல்களில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு காதல் காட்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஒரு சில சீரியல்களில் குடும்பத்தை பிரிப்பது எப்படி என்பதை விலக்கி வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர் .

ஆரம்பம் எதிர்பார்ப்பு தான்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பம் ஆகும் போதே அதிக அளவில் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருந்தது. ஏனென்றால் திருச்செல்வம் சில காலங்களுக்குப் பிறகு இந்த சீரியலை இயக்கி உள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிக அளவில் இந்த சீரியலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மதுரையை மையமாகக் கொண்டு மதுரையில் கூட்டுக் குடும்பமாக வாழும் அண்ணன் தம்பிகளை பற்றியதாக இருக்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் பெண்கள் படும் கஷ்டங்களை சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் இதில் வரும் சில எபிசோடுகள் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

எதிர்பாராத ஏமாற்றம்
நன்றாக படித்து தான் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்த ஜனனியை குணசேகரனின் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்த பிறகு ஜனனி மட்டுமல்லாமல் ஜனனியின் பெற்றோரும் குணசேகரனிடம் அவமானப்படுவதை பார்த்து பலர் அனுதாபங்களை கூறிக் கொண்டிருந்தனர். தற்போதைய ப்ரோமோ தான் பலருடைய கோபத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது. குணசேகரன் வீட்டு இரண்டாவது மருமகளான ரேணுகாவின் அம்மா ஊரில் உள்ளவர்களிடம் சீட்டு பிடித்து நடத்தி இருக்கிறார். அப்போது அவரோடு சேர்ந்து இன்னொரு நபரும் சீட்டு பிடித்து நடத்தி இருக்கிறார். ஆனால் ரேணுகாவின் அம்மாவிடம் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு அந்த நபர் தலைமறைவாகி விட்டார். அதனால் ரேணுகாவின் அம்மா ஆதி முத்து விடமும் அவருடைய குடும்பத்தினமும் ஊர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கடனாக தரும்படி கேட்டு இருக்கிறார்.

இது தீர்வு அல்ல
ஊர்க்காரர்கள் ரேணுகாவின் தாயாரை தேடி ஆதிமுத்துவின் வீட்டிற்கே வந்து கலவரத்தை ஏற்படுத்திய நேரத்தில் ஆதிமுத்து காரராக எங்களுக்கும் இவருக்கும் சம்பந்தமே கிடையாது, இவர் யாரென்று தெரியாது என்று கூறுகிறார். இவர் வழக்கமாக இதைத்தான் பண்ணி கொண்டு இருந்தாலும் தற்போது இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரேணுகா இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு வேற வழியே இல்ல நீ செத்துப் போய் விடு என்று அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். அழுகையோடு அவர் பலமுறை இதற்கு தீர்வு சாவு ஒன்று மட்டும் தான் என்று கூறிக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு பலருக்கும் கடுப்பாக இருக்கிறதாம்.

ரசிகர்களின் கருத்து
தற்போது உள்ள சூழ்நிலையில் அதிக அளவில் தற்கொலை செய்யும் நாடுகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்புதான் கருத்துக்கணிப்பில் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் சீரியல்களிலும் இதையே திரும்பத் திரும்ப சொன்னால் வீட்டில் இதை பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் தன்னம்பிக்கை குறைந்து பிரச்சனைகளில் இருந்து மீளுவதற்கான வழிகளை மறந்து ஒரே தீர்வு தற்கொலை என்று எண்ணம் மனதில் தோன்றிவிடும் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. அதனால் இந்த மாதிரி சீன்களை சீரியல்களில் அதிகமாக வைக்கக் கூடாது என்பத
ரசிகர்கள் பலர் கூறும் கருத்து.












Click it and Unblock the Notifications