ப்ரமோவில் கறார் காட்டும் கமல்ஹாசன்...எபிசோட்டில் இருக்குமா??கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
இதேபோல பல நாட்கள் ஏமாந்து விட்டோம் இன்றாவது ஏதாவது இருக்குமா என பலர் புலம்பி வருகின்றனர்.
பிரியங்காவின் சிரிப்பை பார்த்ததும் பலர் இன்றைய எபிசோட்டை பார்க்க மாட்டோம் என கலாய்த்து வருகின்றனர்.

எபிசோட்டில் ஏதாவது இருக்குமா??
இன்றைய ப்ரோமோ ரசிகர்களின மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த ஆக்ரோஷம் எபிசோட்டில் இருக்குமா??என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைய ப்ரமோகளில் கமல்ஹாசன் கலக்கலாக என்ட்ரி கொடுத்தது மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களையும் வறுத்து எடுக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார். தப்பு செய்பவர்களுக்கு இன்று குறும்படம் இருக்குமா என ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்வமாக இருக்கும் போது ப்ரமோவை பார்த்து முடிவு செய்யாதீர்கள் என பல ரசிகர்கள் எச்சரித்தும் வருகின்றனர்.

அலார்ட் ஆன ரசிகர்கள்
ஒவ்வொரு முறையும் ப்ரமோவில் விறுவிறுப்பை வைத்துவிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். ஆனால் அதை நம்பி ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படி அங்கே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. இதைப் பார்த்த பல முறை ஏமாந்து போன ரசிகர்கள் இன்றைய எபிசோட்டுக்கான இன்றைய ப்ரமோவை பார்த்து கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே பலமுறை இதேபோல ஏமாந்து விட்டோம் இனியும் ஏமாற மாட்டோம் என சபதம் போட்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் குழப்பம்
அடிக்கடி ப்ரமோகளில் அபிஷேக் சண்டை பயங்கரமாக வலம் வரும் ஆனால் நிகழ்ச்சியில் அப்படி ஒன்றுமே இல்லாமல் புஸ்வானம் போல புஸ்ஸன்று போய்விடுகிறது. அது போலத்தான் இன்றைய கமல்ஹாசன் விசாரணையும் இருக்குமா??அல்லது ஒரிஜினல் விசாரணை சரியாக இருக்குமா??என உன் ரசிகர்கள் குழப்பத்திலிருந்து வருகின்றனர். என்ன இருந்தாலும் இன்று ஒரு முறை மட்டும் ப்ரமோவை நம்பி எபிசோடை பார்ப்போம் என ரசிகர்கள் ஒரு சிலர் மனதை தேற்றிக்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு
இன்றைய ப்ரோமோ களில் ரூல்ஸை உடைத்தவர்களை தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். அதை பார்த்ததும், ரசிகர்கள் அப்போ இன்று குறும்படம் இருக்கு என்று கூறிக் கொண்டிருந்தனர். அதேபோல அடுத்த ப்ரமோவில் பிரியங்காவின் பக்கமாக தன்னுடைய விசாரணையை தொடங்கி இருக்கிறார். 2 ப்ரோமோ வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதே விருவிருப்பு நிகழ்ச்சியில் இருந்தால் இன்றைய எபிசோடு தாறுமாறாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆர்வமாகவும் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications