Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னபொண்ணுவிடம் அராஜகம்...பிரியங்காவின் அத்துமீறல் நடவடிக்கை...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா செய்த செயல்தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

எப்படி இருந்த இவர் இப்படி மாறி விட்டாரே என பலர் புலம்பி வருகின்றனர்.

ரசிகர்களின் மத்தியில் பிரியங்காவுக்கு இருக்கும் பெயரை இப்படி கெடுத்து விட்டாரே என்று அவருடைய ரசிகர்களே பீல் பண்ணி வருகின்றனர்.

எது வேணாலும் நடக்கலாம்

எது வேணாலும் நடக்கலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரைக்கும் நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைத்திருந்தாலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலர் புகழின் உச்சிக்கு சென்று விட்டனர். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்டக்கென்று கீழே விழுந்த நிலையில் பெரும் புகழும் சரிந்து போயிருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்துவருகிறது.

கேரக்டர் மாறிவிட்டதா

கேரக்டர் மாறிவிட்டதா

இந்த சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். ஆனால் ஒரு சில பிரபலங்கள் ரசிகர்களுக்கு நன்றாகவே பரிச்சயமானவர்கள். அதில் தொகுப்பாளர் பிரியங்கா, பாடகி சின்னப்பொண்ணு, சின்னத்திரை நடிகர் ராஜூ, காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி, சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி போன்ற ஒருசிலர் மட்டும் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலமடைந்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகி இருக்கின்றனர். இதில் பிரபலமான நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அவருடைய ரசிகர்கள் அனைவருமே இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் எப்படி இருக்கப் போகிறதோ என்று புலம்பி வந்தனர். தற்போது ரசிகர்களின் கருத்து படியே ஒருசில போட்டியாளர்கள் மாறிவிட்டனர் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து

ரசிகர்களின் கருத்து

தொகுப்பாளராக சினிமா வட்டாரத்தில் சின்னத்திரை வட்டாரத்திலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றிருந்த பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார். இதை எதிர்பாராத அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் முதல் வாரத்தில் இவருடைய நடிப்பை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் இவருக்கு அதிகமான ஆதரவினை அளித்து வந்தனர். இந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தான் எப்படியும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாட்களாக கட்டிக் காப்பாற்றி வைத்திருந்த நல்ல பெயர்களை கெடுத்து விட்டார் என அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி எல்லாம் பண்ணலாமா

இப்படி எல்லாம் பண்ணலாமா

நேற்றைய எபிசோடில் இவர் சின்னபொண்ணு விடம் நடந்த நடவடிக்கை பலருக்கும் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. இந்த சீசனில் வயதில் மூத்த ஒரு போட்டியாளராக சின்னப்பொண்ணு இருந்து வருகிறார். ஆனால் பிரியங்கா விஜய் டிவியில் பிரபலமானதால் பிக்பாஸ் வீட்டை தன்னுடைய வீடு போல நினைத்து உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் பேசும் வார்த்தைகளும், செயல்களும் ரசிகர்களின் மத்தியில் கடுப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் போது இந்த வாரம் டாக்ஸ் காயினை சின்னப்பொண்ணு வைத்திருக்கிறாரா?? என்று சோதிப்பதற்காக நேற்று சின்னப்பொண்ணுவை தனியாக அழைத்து சென்று உடைகளை கலைத்து பரிசோதனை செய்திருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

பறக்கும் மீம்ஸ்கள்

பறக்கும் மீம்ஸ்கள்

இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் அக்ஷராவுக்கு ஏற்கனவே வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. அக்ஷராவை பிடிக்காமல் அவர் செய்யும் செயலுக்கு காண்டாகி நெகட்டிவ் கமெண்டுகளை கொடுத்துக்கொண்டிருக்கும் பிரியங்கா, அவர் அந்த காயினை ஒளித்து வைத்திருந்தால் இப்படி செக் பண்ண முடியுமா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். இது விளிம்பு நிலையில் உள்ளவர்களிடம் நடக்கும் அராஜகமாக பார்க்க முடிகிறது. என்றும், மற்றவர்கள் படுக்கையறையை அத்துமீறி பரிசோதனை என்கிற பெயரில் சோதிப்பது ஆணவ நடவடிக்கை என்று நெட்டிசன்கள் பிரியங்காவை பார்த்து கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரியங்காவை மீம்ஸ்களில் போட்டும் கிழித்து எடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+