அபிஷேக்கை பார்த்ததும் பதறிய அண்ணாச்சி?? அண்ணாச்சியின் எக்ஸ்பிரஷன் வேற லெவல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரீ- என்ட்ரி கொடுத்திருக்கும் அபிஷேக் ராஜாவைப் பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்லாமல் எல்லா போட்டியாளர்களும் ஒரு நிமிடம் பதறி போய் இருக்கிறார்கள்.
திடீரென்று அபிஷேக்கை பார்த்ததும் அண்ணாச்சியின் முகம் வெளிறிப் போய் விட்டதைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மீண்டும் அபிஷேக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் என்ட்ரியை ரசிகர்கள் பலர் எதிர் பார்க்கவில்லை போல. அதனால்தான் அவருடைய என்ட்ரியை பார்த்ததும் அனைவரும் திகைத்து போய் இருக்கின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் அவர் இல்லாத பிக் பாஸ் போரடிக்கிறது. கண்டெண்ட் கிடைக்கவில்லை போல என்றெல்லாம் கலாய்த்துக் கொண்டு இருந்தனர். அதுமட்டுமல்லாமல் மீண்டும் அபிஷேக் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வந்தனர்.

அதிர்ச்சியான அண்ணாச்சி
அபிஷேக் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது அவர் எப்போது வெளியே செல்வார் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் வெளியே சென்ற பிறகு அவர் இல்லாத நிகழ்ச்சியை போரடிக்கிறது என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ஒருசிலர் அபிஷேக்குக்கு எதிராக குமுறி கொண்டிருந்தனர். அதில் அண்ணாச்சியும் ஒருவர்,
அபிஷேக் அதிகப்பிரசங்கித்தனம் ஆக செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்று கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவரை பற்றிய தன்னுடைய கருத்துக்களை அண்ணாச்சி வெளிப்படையாக கூறிக்கொண்டிருந்தார்.

மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்
அபிஷேக் வெளியே செல்லும்போது பல போட்டியாளர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு அனைவரும் தங்களுடைய விளையாட்டில் கவனத்தை செலுத்தி விளையாட தொடங்கிவிட்ட நேரத்தில் நேற்றைய எபிசோட்டில் அவருடைய திடீர் என்ட்ரி அனைத்து போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதில் அதிகமான அதிர்ச்சியை முகத்தில் காட்டியவர் அண்ணாச்சி தான். அதை பார்த்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்க்க தொடங்கி விட்டனர். அண்ணாச்சியின் மைண்ட் வாய்ஸில் இதுவாக தான் இருக்கும் என்று பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இனி சுவாரஸ்யம் அதிகரிக்குமா??
தாயக்கட்டை போட்டு விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் பெட்டிக்குள் அபிஷேக்கை திடீரென்று பார்த்ததும் அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அரண்டு போய்விட்டார் அண்ணாச்சி. இந்த கேப்ஷனை அப்படியே மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களுடைய பாணியில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் எப்படியோ இனி சுவாரஸ்யம் இருந்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications