காதலிக்க நேரமில்லை நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: காதலிக்க நேரமில்லை சீரியலில் நடித்த நடிகை சந்திரா லக்ஷ்மன் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து உள்ளார்.
39 வயதில் கர்ப்பமாக இருக்கும் சந்திரா லக்ஷ்மனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ரசிகர்கள் பலரால் மறக்க முடியாத கதாநாயகியாக இப்ப வரைக்கும் வலம் வந்து கொண்டிருக்கும் சந்திரா லக்ஷ்மன் விரைவில் அம்மாவாக போகும் சந்தோஷத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

காதலிக்க நேரமில்லை
சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தான் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றனர்.அந்த வகையில் ஒருவராக இருந்து வருகிறார் சந்திரா லக்ஷ்மன். இவர் 90s களின் ஃபேவரைட் சீரியலான காதலிக்க நேரமில்லை சீரியலின் மூலமாக பலருடைய மனதையும் கவர்ந்துள்ளார். சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க நேரமும் வயதும் இல்லை என்பதை தற்போது நிரூபித்துள்ளார். சந்திரா லக்ஷ்மன் கடந்த வருடம் தான் டேஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருடைய திருமண செய்தியை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

மறக்க முடியாத முகம்
90ஸ் ஹிட்ஸ் களின் பேவரைட் சீரியலில் ஒரு சில சீரியல்களில் வரும் பாடல்கள் இப்ப வரைக்கும் ரசிகர்களால் அதிகமாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் அல்லாமல் 2கே கிட்ஸ்களையும் கவர்ந்த பாடல் "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்" என்று காதல் செய்பவர்களின் மன ஒலியாக இந்த பாடல் இப்ப வரைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலில் பவ்யமான முக அழகை காட்டி அனைவரையும் ரசிக்க வைத்தவர் தான் சந்திரா லக்ஷ்மன். இவர் பல சீரியல்களிலும் சினிமாக்களிலும் நடித்திருந்தாலும் தற்போது இவரை அதிகமான ரசிகர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

வயது தடையே இல்லை
திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சந்திரா லக்ஷ்மன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ஏற்கனவே இவர் 38 வயதில் திருமணம் செய்து கொண்டது பலரையும் வியப்படைய செய்திருந்தது. ஆனால் தற்போது இவர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்று வருகிறார். திருமணத்திற்கும் குழந்தை பேறுக்கும் வயது ஒரு தடையே இல்லை என்பதை இவர் நிரூபித்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

செம்ம மகிழ்ச்சி தான் போங்க
சந்திரா லக்ஷ்மன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய வளைகாப்பு போட்டோக்களை வெளியிட்டு அதில், எங்கள் குட்டியை விரைவில் வரவேற்க நாங்கள் ஆயத்தமாகி வரும் போது நினைவுகளை உருவாக்குகிறோம். எனவே அற்புதமான அழகான குடும்பம் மற்றும் அன்பான நண்பர்கள் எனக்காக ஒரு பாரம்பரிய வளைகாப்பு ஏற்பாடு செய்தனர். எங்கள் பெற்றோருக்கும் அவர்களின் ஆசிகளுக்கும் நிபந்தனையற்ற அன்புக்கும் பெருந்தன்மையானது. என்னை தாயாக மாற்றிய என் தோஷேனுக்கு சிறந்த அணைப்புகள் என்று மகிழ்ச்சி பொங்க மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications