Coolie: கூலி படத்திற்கு எதற்காக A சான்றிதழ்? ரசிகர்கள் கேள்வி
சென்னை: கூலி திரைப்படத்திற்கு எதற்காக ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். குழந்தைகள் பார்க்கக் கூடாத அளவுக்கு அந்த படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை. வழக்கம் போல்தான் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் காலை வெளியாகியுள்ளது. இது ரஜினியின் 171 ஆவது படமாகும். ஜெயிலர் படத்தில் கூட மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகம் உள்ளிட்டோருடன் ரஜினி நடித்திருந்தார்.
அது போல் கூலி படத்திலும் பல்வேறு ஸ்டார்களுடன் அவர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. முதல் பாதி ஸ்லோவாக செல்வதால் சுமாராக இருப்பதாகவும் பிற்பாதி விறுவிறுப்பாகவும் செல்வதாக சொல்லப்படுகிறது.
இந்த படம் இருட்டிலேயே எடுக்கப்பட்டதால் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் முதல் பாதியில் காட்சியில் விறுவிறுப்பு இல்லை என்றும், ஸ்ருதியை சவுபின் துரத்தும் சீன்கள் நீளமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். அது போல் ரஜினியின் பிளாஷ்பேக்கை இன்னும் நீட்டியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது. அதாவது 18 வயதிற்கு மேல் உள்ள நபர்கள் மட்டுமே இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியும். படத்தை பார்த்துவிட்டு வந்த பல ரசிகர்கள் எதற்கு இந்த படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கினார்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
படத்தில் அப்படி ஒரு ஆபாச காட்சியோ, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோ இல்லை. பிறகு ஏன் A சான்றிதழ் என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கட் செய்ய வேண்டிய அளவுக்கு எந்த காட்சிகளும் இல்லை, குடும்பமாக போய் பார்க்கலாமே என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். U/A சான்றிதழே கொடுத்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
ஹைதராபாத்தில் வசிக்கும் சத்யராஜ், ரஜினியின் நண்பர். சத்யராஜ் இறந்து விடுகிறார். இவர் இயற்கையாக இறக்கவில்லை என ரஜினிக்கு தெரியவருகிறது. உடனே தனது நண்பனை யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டறிகிறார் ரஜினி. யார் கொலை செய்தது, ரஜினி அவர்களை பழி வாங்கினாரா என்பதுதான் கூலி படத்தின் கதை.
இந்த படத்தில் சவுபின் நன்றாக நடித்திருக்கிறாராம். அது போல் உபேந்திராவின் காட்சிகளும் ரசிக்கும்படியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது காட்சிகளை இன்னும் கொஞ்சம் வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கருதுகிறார்கள். அது போல் ஆமீர் கான் சீன்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்தும் உலா வருகிறது.












Click it and Unblock the Notifications