அம்மு அபிராமி குக் வித் கோமாளி பிரபலத்தை காதலிக்கிறாரா? இணையத்தில் வெளியிட்ட புகைப்படம்
சென்னை: நடிகை "அம்மு அபிராமி" குக் வித் கோமாளி இயக்குனர் "பார்த்திவ் மணி"யை காதலிக்கிறாரா? என்ற கேள்விகள் இணையத்தில் அதிகமாக எழுந்து வருகிறது. அதற்கு காரணம் பார்த்திவ் மற்றும் அபிராமி வெளியிட்ட புகைப்படங்களும் அதற்கு கொடுத்த கேப்ஷனும் தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து நான்கு சீசன் வரைக்கும் இயக்குனர் பார்த்திவ் மணி தான் இயக்கி வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிராமியின் பிறந்தநாளுக்கு பார்த்திவ் மணி, அபிராமியோடு எடுத்த புகைப்படத்தை போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு கீழே கொடுத்த கேப்ஷன் வைத்து தான் ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகை அம்மு அபிராமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதே நேரத்தில் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பைரவா திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமான அம்மு அபிராமி அதைத்தொடர்ந்து ராட்சசன், அசுரன், யானை என்று பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது அதிகமான திரைப்படங்களில் அழுத்தமான காட்சிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி தான் அம்மு அபிராமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனரான பார்த்திவ் மணி அபிராமியோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த புகைப்படத்திற்கு குணா திரைப்படத்தில் இடம்பெற்ற "அபிராமி அபிராமி" என்ற பாடலை எடிட் செய்து பயன்படுத்திருக்கிறார்.

அதோடு அந்த புகைப்படத்திற்கு "Happy faces gathered together celebrate the sweetest soul. Happy abhirami day. Be happy eppoovum" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு அபிராமி "தேங்க்யூ எல்லாத்துக்கும்" என்று பதில் கொடுக்க, அதற்கு ரசிகர்கள் நீங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கீங்களா? நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதோடு இந்த போஸ்டுக்கு நடிகை ரித்திகா, ஆங் என்று கலாய்த்து ஒரு இமேஜியோடு கமெண்ட் போட்டு இருக்கிறார். அதுபோல சிவாங்கியும்
"ஆஹா" என்று சொல்லி இருக்கிறார். அதுபோல பார்த்திவ் மணி தான் சிங்கிளாக இருக்கும் போட்டோ ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அம்மு அபிராமி "சூப்பர்" என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அந்த கமெண்ட்க்கு குக் வித் கோமாளி குரோஷி "இந்த ஹேர் ஸ்டைலுக்கு காரணம் நீதானே அம்மு" என்று கேட்டிருக்கிறார்.

இதனால் இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா? என்று ரசிகர்கள் குழப்பத்தோடு மேலும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் அம்மு அபிராமி இதுகுறித்து எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications