“கிழக்கே போகும் ரயில்” ஹீரோவா இது? தள்ளாடும் நிலையில் டிவி நிகழ்ச்சியில் வந்த நடிகர் சுதாகர்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான "கிழக்கே போகும் ரயில்" திரைப்படம் யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த "சுதாகர்" சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அந்த வகையில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலமாகத்தான் ராதிகாவை இந்த சினிமா முதல் முறையாக அடையாளம் கண்டு கொண்டது. முதல் திரைப்படத்திலேயே ராதிகாவின் திறமையை இந்த உலகத்திற்கே பாரதிராஜா காட்டியிருந்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு" என்ற பாடல் அந்த காலத்தில் எவர் கிரீன் பாடலாக இருந்தது.

அதுபோல அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கோவில் மணி ஓசை, மலர்களே போன்ற பாடல்கள் இப்போதும் பலருடைய மனம் கவர்ந்த பாடல்களாக தான் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ராதிகாவின் நடிப்பு எவ்வளவு இயல்பாக இருந்ததோ அதுபோல ராதிகா நடிப்பிற்கு இணையாக போட்டி போட்டு தன்னுடைய நடிப்பை வெளிகாட்டியவர் தான் சுதாகர்.
இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் கிட்டத்தட்ட 600 படங்களில் சுதாகர் நடித்திருக்கிறார். அதுபோல ராதிகாவோடு கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடித்த பிறகு ஏற்பட்ட பிரபலத்தால் அதற்கு பிறகு ராதிகாவுடன் மட்டும் கிட்டத்தட்ட 11 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
ராதிகாவும் சுதாகர் சேர்ந்தாலே வெற்றி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதுவும் சுதாகர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படி பல படங்களில் நடித்து வந்த சுதாகரை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவில் அவ்வளவாக பார்க்க முடியவில்லை.
ஆனால் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதாகரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். காரணம் அந்த நிகழ்ச்சியில் சுதாகர் கலந்து கொண்ட போது தள்ளாடும் நிலைமையில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார். எப்படி இருந்த சுதாகர் இப்படி மாறிவிட்டாரே என்று பலரும் அவர் குறித்து ஃபீல் பண்ணி கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.
சுதாகர் உடன் நடித்த பல நடிகர் நடிகைகள் கூட இப்போதும் இளமையாக உத்வேகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் இவர் அந்த காலத்தில் அவ்வளவு பிரபலமாக இருந்த நிலையில் இப்போது இப்படி மாறிவிட்டாரே என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது. எல்லோருக்கும் வயது ஆக ஆக உடல் தளர்வடைய தான் செய்யும். ஆனால் நமக்கு பிரபலங்களாக பார்த்த நபர்கள் திடீரென்று எதிர்பாராத கோணத்தில் பார்க்கும்போது அனைவருக்கும் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications