அட பாவமே..! சந்திரமுகி திரைப்படத்தை காப்பி பேஸ்ட் செய்த பிரபல சீரியல்.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் வானத்தைப்போல மற்றும் மிஸ்டர் மனைவி சீரியல் இணைந்து ஒரு மணி நேரமாக மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் தற்போது சந்திரமுகி திரைப்படத்தை காப்பியடித்து கதை இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் இந்த சீரியல் பற்றிய மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது.

Fans tease Sun TV Vanathai pola and Mr. Wife serial for copying chandramukhi movie

ஆரம்ப காலத்தில் இருந்தே சீரியல்கள் என்றால் அது சன் டிவி சீரியல்கள் தான். சன் டிவி சீரியல்களில் நடித்தாலே போதும் பலரும் பிரபலம் அடைந்து விடுவார்கள். அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்களை கவர்ந்த இந்த சேனலுக்கு போட்டியாக பல சேனல்கள் வந்தாலும் சன் டிவி சீரியல்களின் டிஆர்பியை அடித்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் தான் இருக்கின்றது.

ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் பல சேனல்களில் அரைத்த மாவு கதை தான் அரைத்து வருகிறது. ஒரு சேனலில், ஒரு கதை சக்சஸ் ஆனால் அதே பாணியை பலரும் பின்பற்ற தொடங்குகிறார்கள். அதிலும் இப்போது அதிகமான சீரியல்களில் கதாநாயகன் அம்மா பேச்சை கேட்கும் பையனாக இருப்பார். அம்மா கிழிச்ச கோட்டை தாண்டாதவராகவும் பணக்கார வீட்டு பையனாகவும் இருப்பார்.

அதே நேரத்தில் கதாநாயகி ஏழ்மையான குடும்பத்தில் இருப்பார். எதிர்பாராத சூழ்நிலையில் கதாநாயகியும், கதாநாயகனும் பிடிக்காமல் திருமணம் செய்து கொள்வார்கள். பிறகு அவர்களுக்குள் நடக்கும் மோதலும் காதலும் தான் பல சீரியல்களின் கதை கண்டன்டாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட மிஸ்டர் மனைவி சீரியலும் அப்படித்தான் இருக்கிறது.

ஆனாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி கிடைக்கவில்லை என்பதாலோ என்னவோ தற்போது வானத்தைப்போல சீரியல் மற்றும் மிஸ்டர் மனைவி சீரியல்கள் இரண்டும் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

Fans tease Sun TV Vanathai pola and Mr. Wife serial for copying chandramukhi movie

இந்த நிலையில் திருவிழா பங்க்ஷனுக்காக கிராமத்திற்கு வந்திருக்கும் வானத்தைப்போல துளசி குடும்பம் மற்றும் மிஸ்டர் மனைவி அஞ்சலி இருவரும் ஒரு அரண்மனையில் தங்கி இருக்கின்றனர். அப்போது அங்கே சந்திரமுகி திரைப்படத்தில் வரும் அறை போன்று ஒரு அறை இருக்கிறது. அங்கே மாந்திரீக தகடுகள் மற்றும் மாந்திரீக கயிற்றால் முழுமையாக கட்டப்பட்டு இந்த அறையை யாரும் திறக்க கூடாது என்ற கூறுகின்றனர்.

அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக அஞ்சலி மற்றும் துளசி இருவரும் சேர்ந்து போக இருக்கின்றனர். தற்போது இது சந்திரமுகி திரைப்படத்தை காப்பி அடித்தது போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கதை இல்லை என்பதற்காக ஒரு மணி நேரமாக இரண்டு சீரியல்களின் சங்கமும் வைத்தும், அதற்கும் சரியான கதை இல்லாமல், காதல் கதை கொண்ட சீரியலில் திகில் கிளப்பும் காட்சிகளை வைத்திருக்கிறார்கள் என்பது பலருடைய கேள்விகளாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+