செந்தாமரை மகள் என்ன இப்படி பேசறாரு? கல்யாணம் பண்ணினால், குழந்தை பெத்துக்க கூடாதா? செம பிராக்டிக்கல்
சென்னை: பழம்பெரும் நடிகர் செந்தாமரையின் மகள் மற்றும் மனைவி இருவரும் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்கள்.. அந்த பேட்டியில், இன்றைய இளையதலைமுறைகள் குறித்தும், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்கள். இந்த பேட்டி இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Behindwoods சேனலுக்கு செந்தாமரை மகள் தந்துள்ள பேட்டியில், "நான் ரொம்ப பிராக்டிக்கல்.. இதை சொல்லலாமா தெரியல.. என் பையனுக்கு இப்போ 30 வயசாச்சு.. நானே அவனை கல்யாணம் செய்துக்க வேணாம்னு சொல்றேன்.. கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறீங்க? நான் கல்யாணம் செய்துக்கிட்டதால் இப்படி சொல்றதா நினைப்பாங்க.

பொறுப்புகள்: அப்படி கிடையாது... கல்யாணம் செய்தால் பொறுப்புகள் கூடும்.. இந்த பொறுப்புகளால் என்ன பலன் கிடைக்க போகிறது.. இன்னைக்கு லிவிங் டூ கெதர் எல்லாம் வந்துவிட்டது. என்னை கேட்டால் லிவிங் டூ கெதரே பரவாயில்லை.. திருமணம் செய்யும்போது, எந்த பொறுப்பை எடுத்துக் கொண்டாலும், இரு பக்கங்களிலிருந்தும் ஈகோ மோதல் ஏற்படுகிறது.
என் பையன் ரொம்ப சென்சிடிவ்.. லவ் விவகாரங்களில் நிறைய அனுபவப்பட்டிருக்கான்.. இன்றைய காலகட்டங்களில், பெண்களைவிட ஆண்களை காப்பாற்ற வேண்டிய சூழல் உள்ளது..
மனநிலை: மக்களின் மனநிலைமை இன்னைக்கு அப்படி ஆயிடுச்சு.. நல்லா சம்பாதிக்கணும், ஊர்சுற்றணும், ஜாலியாக இருக்கணும்னு நினைக்கறாங்க.. ரொம்ப சுயநலமாக உள்ள வாழ்க்கையையே அனைவரும் இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம்..
கல்யாணம் செய்வதாக இருந்தால், அந்த பெண்ணை நாம பாதுகாக்கணும். அந்த பெண்ணுக்கு தேவையானதை வாங்கி தரணும்.. வீடு பார்த்து தரணும்.. சாப்பாட்டு செலவுக்கு எல்லாம் வாஙுகி போடணும்.. அடுத்து குழந்தை பிறக்கும். அந்த குழந்தைக்கு எல்லாம் செய்யணும்.. இப்படி எல்லாமே செய்தாலுமே, அங்கே போகணும், இங்கே போகணும் என்று சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள்..
சகிப்புத்தன்மை: நாங்கள் ஏதோ ஒன்றினால் பாதிக்கப்பட்டதால் இப்படி பேசுகிறோம் என்று நினைக்க வேண்டாம். இன்றைய தலைமுறைகள், மிகவும் சென்சிடிவாக இருக்கிறார்கள்.. எதுவும் நடக்கலேன்னா, அதை ஏற்றுக்கொள்வதில்லை.. பார்க்கும் பார்வையே வித்தியாசப்படுகிறது.. சகிப்புத்தனமையும் மிகவும் குறைந்துவிட்டது. தாங்கள் நினைச்சது உடனே நடக்கணும்னு நினைக்கறாங்க.. ஒரே பாட்டில் பணக்காரனாகிவிடணும்னு நினைக்கிறாங்க..
கல்யாணம் செய்துப்பதாக இருந்தால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்.. இவங்க 2 பேரும் போடற சண்டையில், அந்த குழந்தை எப்படி வளரும், அந்த குழந்தைகளின் மனநிலை எப்படியெல்லாம் பாதிக்கப்படும்? இதுக்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications