பலித்தது அப்பா சொன்னது.. நடிகை மீனாவின் பாசமும், 10 சாக்லேட்டும்.. ஆஸ்காரின் ஆஸ்தான நடிகை: பிரபலம்
சென்னை: ஒருநாளைக்கு 10 சாக்லேட் தந்துதான் மீனாவிடம் வேலை வாங்க முடியும்.. குழந்தை நட்சத்திரம் என்றாலும், அருமையான நடிகை.. சொன்னதை கேட்டு நடிப்பாங்க என்று நடிகை மீனா பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
Behind Talkies என்ற யூடியூப் சேனலுக்கு, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நடிகை மீனா பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

"நடிகை மீனாவை நான் இன்றைக்கும் பேபி மீனா என்றுதான் கூப்பிடுவேன்.. நாங்கள் தயாரித்த தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், பன்னீர் நதிகள் என 4 படங்களிலுமே குழந்தை மீனா நடித்திருந்தாங்க.. ஆஸ்கார் நிறுவனத்தின், ஆஸ்தான நடிகர்கள் என்றால் அது 2 பேர்தான். ஒருவர் சிவக்குமார், மற்றொருவர் மீனா. சிவக்குமாரும் மேற்கண்ட 4 படங்களிலும் நடித்திருக்கிறார்.
தீர்ப்புகள் திருத்தப்படலாம் படத்தை என் அப்பா எடுத்தபோது எனக்கு 12 வயசு இருக்கும், மீனாவுக்கு 8 வயசிருக்கும்.. டயலாக் சரியாக பேசவில்லையானால், சரியாக நடிக்கவில்லையானால், அவங்கம்மா ராஜமல்லிகாவை குழந்தையை போட்டு அடிச்சிடுவாங்க.. உடனே மீனா அழுதுகொண்டே நடிக்க முடியாதுன்னு சொல்லியிட்டு போயிடுவாங்க.
ஷூட்டிங்: ஷூட்டிங்கில் இப்படி குழந்தையை அடித்துவிடுவதால் என் அப்பா, அந்தம்மாவை கூப்பிட்டு திட்டுவாங்க.. எப்பவுமே மீனாவுக்கு ஷூட்டிங் என்றால் தினமும் 10 மில்க் சாக்லேட், 5 ஸ்டார் சாக்லேட்டுகளை புரடக்ஷனில் சொல்லி என் அப்பா வாங்கி வைத்துவிடுவார்.. ஒருநாளைக்கு 10 சாக்லேட் தந்துதான் மீனாவிடம் வேலை வாங்க முடியும்.. குழந்தை நட்சத்திரம் என்றாலும், அருமையான நடிகை.. சொன்னதை கேட்டு நடிப்பாங்க.
நாங்க 2 பேரும் சிறுவயதில் ஒன்றாக சுற்றித்திரிந்தவர்கள்.. ஒன்றாகவே சாப்பிட்டவர்கள்.. அதனால், நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன.. நாங்கள் விஷ்ணு படம் எடுத்து கொண்டிருந்தபோதுதான் மீனாவை மறுபடியும் பார்த்தேன்.. அப்போது மீனா பெரிய நடிகையாயிட்டாங்க.. விஷ்ணு படத்துக்கு நான்தான் புரடியூசர், விஜய் சார்தான் ஹீரோ.. அப்போது மீனா பிரசாத் ஸ்டுடியோவில் அர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தார். நானும் என் அப்பாவும் வெளியில் சேர் போட்டு உட்கார்ந்துட்டிருந்தோம்.
ஞாபகம் இருக்கா?: என் அப்பாவை பார்த்ததுமே, "அங்கிள்" என்று ஓடிவந்து பேசினார் மீனா.. அங்கிருந்த என்னை பார்த்து, "அண்ணா நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டார்.. என்னை ஞாபகம் இருக்கா? என்று நான் மீனாவிடம் சிரித்துக் கொண்டே கேட்டேன். அதுக்கப்புறம் என் அப்பா, மீனாவை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.
ஆனால், மீனாவுக்கு 13 வயது காலகட்டங்களில் குழந்தையாகவும் நடிக்க முடியாது, ஹீரோயினாகவும் நடிக்க முடியாது. அப்போது குடும்பத்தில் பொருளாதார சிக்கல் இருந்திருக்கிறது. என் அப்பாவிடம் வந்த மீனாவின் அம்மா, குழந்தையாக நடித்தவரை ஒன்றும் தெரியவில்லை.. இப்போது வாய்ப்பும் வரவில்லை என்று குறைபட்டு கொண்டார்.
பலித்த வார்த்தை: அதற்கு என் அப்பா, "இந்த குழந்தை கூடிய சீக்கிரம் பெரிய நடிகையாக வருவாள்.. தமிழ் சினிமாவை ஆளாமல் விடாது, நிச்சயம் இது நடக்கும் பார் மல்லிகா என்றார்.. அப்பா அன்று சொன்னது பின்னாளில் அப்படியே பலித்தது" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications