என்னாது பிக்பாஸ் சீசன் 7 இல் இந்த வில்லி நடிகையா.. அப்போ வாரந்தோறும் கமலுக்கு பஞ்சாயத்து இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் தொலைகாட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப் போகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் குழுவினர் எதிர்பார்த்ததை விட இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு உள்ளது.

அதிலும் சனி, ஞாயிறு அன்று கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அவர் அரசியல் பேசுவார், புத்தகங்களை பரிந்துரைப்பார். இதனால் அவரது நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் டிவி முன்பு குவிவர்.
இந்த சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனு ரூ 100 கோடிக்கு மேல் கமல்ஹாசனுக்கு ஊதியம் என சொல்லப்படுகிறது. எப்படியும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி பொங்கல் வரை நடைபெறும். அதன் பிறகு சில நாட்களில் இறுதி போட்டி நடைபெறும். அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
அதனால் இந்த நிகழ்ச்சியில் கமல் நிச்சயம் அரசியல் பேசுவார். இந்த நிகழ்ச்சிக்கு யார் வருவார்கள் என முன் கூட்டியே யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கும். அந்த வகையில் இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோவை பெண் டிரைவர் ஷர்மிளா கலந்து கொள்கிறார் என்கிறார்கள்.

அது போல் ரேகா நாயர், பாவனா, மாகாபா ஆனந்த், குக் வித் கோமாளி சரண் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது. இ்நத நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த ஒரு நடிகையும் பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்து கொள்கிறார்கள் என்கிறார்கள். அதாவது வில்லியாக நடித்த வெண்பா என்கிற ஃபரீனா ஆசாத்தான் கலந்து கொள்கிறார் என்கிறார்கள்.
இதுகுறித்து உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. பாரதி கண்ணம்மா சீசன் 1 ற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் சீசன் 2 தொடங்கியது. ஆனால் இதற்கு போதிய வரவேற்பு இல்லை என்கிறார்கள். டிஆர்பி ரேட்டிங்கும் மோசமாகவே இருந்தது. இதனால் இந்த சீசனை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு இதில் நடித்த வில்லி வெண்பாவும் பிக்பாஸுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வருவதாகவே சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications