அட்வைஸ் செய்தவருக்கு பரீனா அளித்த பதிலால் திட்டி தீர்த்த ரசிகர்... இப்படியும் கூட யோசிக்கிறார்களே
சென்னை : பாரதிகண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு அட்வைஸ் செய்த ரசிகருக்கு பரீனா கொடுத்த அதிரடி பதிலை பார்த்த ரசிகர் பரீனாவை திட்டித் தீர்த்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா வெண்பா
இல்லத்தரசிகளின் பேவரேட்களில் ஒன்றாகவும் பாரதி கண்ணம்மா உள்ளது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். மேலும், சீரியல்களுக்கு ஹீரோ, ஹீரோயினி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் வில்லிகள் தான். வில்லி இருந்தால் மட்டுமே தான் ஹீரோ ஹீரோயின்களுக்கு அங்கு வேலை. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் வெண்பா கதாபாத்திரம் என்று சொல்லலாம். இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா.

சின்னத்திரை வில்லி
ஒரு தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் நீலாம்பரி வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் பரீனா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் வெண்பாவாக பலருக்கும் பரிச்சயமான பரீனா தற்போது கலர்ஸ் தமிழில் பாசிட்டிவ் கேரக்டரிலும் நடித்து வருகிறார். சீரியலில் மட்டுமல்லாமல் இவர் நிஜத்திலும் பிஸியாக இருந்து வருகிறார். போட்டோஷூட், நடிப்பு என இவர் எந்த துறையும் விட்டுவைக்காமல் தன்னுடைய திறமையை வெளிக் காட்டி வருகிறார்.

பரீனா கொடுத்த பதில்
சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவருக்கு கடந்த வருடம் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு இவர் மீண்டும் தற்போது நடிப்பதற்கு தொடங்கிவிட்டார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் ஒன்றில் இவர் வெளியிட்ட வீடியோவில் ரசிகர் ஒருவர் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் குழந்தையோடு நேரத்தை செலவிடுங்கள் என்று அட்வைஸ் கொடுத்து இருக்கிறார். அதற்கு அது எனக்கு தெரியும் என் பையன் என் கூட தான் இருக்கிறார் என்று பதிலளித்திருக்கிறார்.

பரீனாவை விமர்சித்த ரசிகர்
பரீனா ரசிகரின் கேள்விக்கு அதிரடியான பதில் அளித்ததும் மற்றொரு ரசிகர் இவர் மிகவும் திமிர் பிடித்தவர். இவருடைய பக்கத்தில் எதையும் கமெண்ட் செய்யாதீர்கள். இவரை பிளாக் செய்து விடுங்கள். ரசிகர்கள் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்பதை மறந்து விட்டார். எப்போதும் ரசிகர்களிடம் திமிராக தான் பதில் கூறுகிறார். நிஜ வாழ்க்கையில மிகவும் மோசமான குணம் கொண்டவர் என்று விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். இப்படி ஒருவர் பேசியிருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications