பரீனாவுக்குள் இத்தனை இருக்கா.. அப்பப்பா.. மகிழ்ந்து நெகிழும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்ப இருக்கிற சூழ்நிலையில் ரசிகர்கள் சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளை மட்டுமல்லாமல் திறமையை காட்டும் நடிகைகளையும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் .

அதுவும் தொகுப்பாளராக இருந்தாலும் சரி சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களாக இருந்தாலும் சரி அவர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது .

அந்த மாதிரிதான் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சீரியல்களில் வில்லியாக ரசிகர்களால் கழுவிக் கழுவி ஊற்றப்பட்டு வரும் பரீனா ஆசாத் சூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு பாடி அசத்தியிருக்கிறார் . அவர் செய்யும் சேட்டைகளும் அவர் பாடிய பாட்டும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பரீனா ஆசாத்

பரீனா ஆசாத்

பரீனா முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெண்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் .இவர் ஜீ தமிழ் அஞ்சறைப் பெட்டியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது பல பெண்களும் இவரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவர் இந்த நிகழ்ச்சிகளில் விதவிதமான அலங்காரத்தோடு புடவைகளிலும் மாடல்களிலும் கலக்கிக் கொண்டு இருப்பார்.

உச்சரிப்பு சூப்பர்

உச்சரிப்பு சூப்பர்

அவருடைய அழகான தமிழ் உச்சரிப்பும் பலருக்கும் பிடித்திருந்தது.அதனால் இவருக்கு ரசிகர் வட்டாரம் பெருகியது .ஆனால் அதன் பிறகுதான் இவர் பாரதி கண்ணம்மா சீரியல் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலமாக இவர் வேறு அளவில் தற்போது ரசிகர்களை மிரட்டி வருகிறார். இவர் இந்த பாரதிகண்ணம்மா சீரியலில் பாதிக்கு பிறகுதான் அறிமுகமானார். இவர் என்ற சீரியலில் அறிமுகமாகும் போது இவரது கேரக்டர் இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஆக இருக்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை.

என்னா வில்லத்தனம்

என்னா வில்லத்தனம்

பரீனாவும் கூட அதேபோல இதை எதிர்பார்க்காமல் தான் இருந்திருக்கிறார். ஆனால் இப்போது இவரை பார்த்த ரசிகர்கள் கொலைவெறியில் இருக்கிறார்கள் .அந்த அளவிற்கு இவர் வில்லத்தனத்தை கட்டிக் கொண்டிருக்கிறார். பொதுவாகவே சீரியல்களிலும் சரி திரைப்படங்களிலும் சரி நடிக்கும் நடிகர்கள் கேரக்டர்களை பொருத்தே ரசிகர்கள் அவர்களின் கேரக்டரில் முடிவு பண்ணினார்கள் .அந்த மாதிரிதான் இவரின் நடிப்பை பார்த்து தற்போது ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகிறார்கள்.

 ஜவ்வா இழுக்குதே

ஜவ்வா இழுக்குதே

இதுவரையிலும் இந்த சீரியல் ஜவ்வாக இழுத்துக் கொண்டு இருந்தது. தற்போது இந்த சீரிய யாரும் எதிர்பார்க்காத அளவில் வைரலாக பரவி வருகிறது . இதற்கு கண்ணம்மாவை பற்றி ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள் ஒரு பக்கம் என்றால் இந்த சீரியலின் வில்லியாக நடிக்கும் இவரும் ஒரு காரணம் தான். இவருடைய வில்லத்தனத்தை பார்த்து பல பெண்கள் இவருக்கு சாபமிட்டும் வருகிறார்களாம். ஆனாலும் இவருடைய கேரக்டர் ரசிகர்களிடம் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது இவருக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

 எப்பவும் ஜாலிதான்

எப்பவும் ஜாலிதான்

எப்பவுமே ஜாலியாக கலகலப்பாக இருப்பது தான் ரொம்பவும் பிடிக்குமாம். அதேபோல இந்த சீரியலில் செட்டில் இவர் ஜாலியாக அனைவரையும் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார். இவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட இவரது அழகை புகழாதவர்கள் இல்லை . இவருடைய உடையும் இவர் அழகையும் பல ரசிகர்கள் ரசிக்க தான் செய்கிறார்கள். அது போல இவருடைய சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை பார்த்து பல ரசிகர்கள் இவருக்குள் இவ்வளவு திறமையா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

செம திறமை

செம திறமை

அந்த அளவிற்கு இவர் பாட்டு பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கிறார். இந்த சீரியலில் இவருடன் நடிக்கும் ராஜுவும் பாட்டு பாடி என்ஜாய் பண்ணி இருக்கிறார்கள் .அதுவும் இவர்கள் பாடியதற்கு எதிர் பாட்டு ரசிகர்களிடம் இருந்து கேட்டிருக்கிறார்கள். இந்த மாதிரி மனதிற்குப் பிடித்த உங்களுக்கு பிடித்த பாடல்களை சொல்லுங்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் போஸ்ட் போட்டிருக்கிறார். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் பாடல்களை கமெண்ட்டுகளாக போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+