ரவி மோகனுக்கு சாதகமான தீர்ப்பு.. அதே நாளில் மாமியார் சுஜாதா போட்ட 3 ஸ்டோரி.. இதை கவனிச்சீங்களா ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் பிரச்சனையாக இருந்து வருகிறது. முதலில் இது ஒரு குடும்பப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இரண்டு பேரும் சோசியல் மீடியாவில் மாறி மாறி பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இதனால் இது அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. இந்த வரிசையில் தற்போது இன்னொரு சம்பவம் இணைந்து இருக்கிறது.

ரவி மோகன் விவாகரத்து வழக்கு

அதாவது ஆர்த்தி ரவி மோகன் தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் நீதிபதிகள் அந்த கோரிக்கையை ஏற்காமல் விவாகரத்து வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் இடைக்கால பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனது மகன்களை ரவி மோகன் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சுஜாதா பதிவு

இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் ஆர்த்தியின் அம்மாவும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று ஸ்டோரிகளை பகிர்ந்திருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கவனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் சுஜாதா பகிர்ந்த முதல் பதிவில், ஒரு உறவு மூன்றாவது நபரால் உடைவதில்லை. அந்த மூன்றாவது நபருக்கு இடம் கொடுக்கும் நபரால்தான் உடைகிறது என்று சொல்லி இருக்கிறார்.

Ravi Mohan Aarthi

அடுத்த பதிவில், "நீ நல்ல மனைவியாக இல்லாததால் அவர் துரோகம் செய்யவில்லை. அவர் நல்ல ஆணாக இருக்க தவறியதால் தான் துரோகம் செய்தார்" என்றும் மூன்றாவது பதிவில், "மனைவியையும், குழந்தைகளையும் காயப்படுத்திவிட்டு வேறு ஒருவருக்கு ரோஜா கொடுக்கும் கணவர்" என்ற வாசகமும் இடம் பிடித்திருக்கிறது. இந்த மூன்று பதிவுகளில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

ரசிகர்கள் கருத்து

ஆனாலும் இந்த பதிவுகள் ரவி மோகனை தாக்கி தான் வைத்திருப்பதாக சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மையில் சுஜாதா ரவி மோகன் இப்படிப்பட்ட மறைமுக பதிவுகளை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு ரவி மோகன் ஆர்த்தி பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்த பிறகும் பெண், குடும்பம், நம்பிக்கை, துரோகம், பெண்களின் மனவேதனை போன்ற கருத்துக்களை பலமுறை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

ரவி மோகனுக்கு நிம்மதி கொடுத்த கோர்ட்.. ஜீவனாம்சம், மகன்களை சந்திக்கும் உரிமையில் ட்விஸ்ட்!
அப்போது கூட இது ரவிக்கான பதில் தான் என்று நெட்டிசன்கள் விவாதித்தனார். இப்போது நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் அவர் இது போன்ற பதிவுகளை வெளியிட்டு இருப்பது அந்த விவாதத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து விஷயத்தை அதிகமாக பேசப்பட்டது பாடகி கெனிஷா தான்.

Ravi Mohan Aarthi

ஆரம்பத்தில் ரவி மோகனுக்கும் கெனிஷாவின் நட்பால் இந்த பிரிவுக்கு காரணம் என்று பேசப்பட்டது. ஆனால் கெனிஷா அதை மறுத்து இந்த விவாகரத்துக்கு நான் காரணமில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதோடு தான் ரவி மோகனை விட்டு விலகிப் போவதாகவும் அறிவித்துவிட்டு சோசியல் மீடியாவை விட்டு விலகி இருந்தார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ரவி தன்னுடைய மனநலம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.

காமெடி நிகழ்ச்சியில் செக்கிழுத்த செம்மல் வ. உ. சி. -யை அசிங்கப்படுத்திய பெண்.. கோபத்தில் மோகன் ஜி விளாசல்
அப்போது கண்கலங்கி அவர் அழுததை பார்த்து, அழாதீங்க ரவி எல்லாம் சரியாயிடும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறியிருந்தனர் அதோடு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மனநல முக்கியம் என்று பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க, நீதிமன்ற விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுஜாதா விஜயகுமாரின் இந்த மூன்று ஸ்டோரிகளும் இந்த குடும்ப விவாகரத்தை மீண்டும் பேசு பொருளாக மாற்றி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+