Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிசார்ட்டில் இரவு விருந்துகளுக்கு ஆப்பு? நோ நைட் பார்ட்டீஸ்.. டக்னு செல்போன் நம்பரை மாற்றிய பிரபலம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கிய போதைப்பொருள் வழக்கு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை துரிதமாகி கொண்டிருக்கிறது. போதைப்பொருளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கெவின் கிருஷ்ணா மட்டுமின்றி ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு போதைப்பொருளை வழங்கியதாக வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் பாலிவுட் கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.. சமீபகாலமாக பிரபலங்கள் பார்ட்டி செல்வது அதிகரித்துள்ளது... இந்த பார்ட்டிகளை பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Television night parties cellphone number

பிரபலங்களுக்கான போதைப்பொருள் விநியோகம் என்பதே இதுபோன்ற பார்ட்டிகளில் நடப்பதாகவும் சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன.. எனவேதான், திரைத்துறை நடத்தும் பார்ட்டிகளில் பங்கேற்கும் நடிகர்கள், நடிகைகளின் லிஸ்ட்டை போலீசார் எடுத்து வருகிறார்களாம்..

யார் யார் பிரபலங்கள்

ஏற்கனவே விசாரணையிலுள்ள கெவின், பிரசாத் ஆகியோர் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபலங்கள் யாராவது போதைப் பொருட்களை பயன்படுத்தினார்களா? அவர்கள் யார் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகர் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும், போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும், விற்றதாகவும் புகார் கூறப்பட்டு, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.

இரவு விருந்துகள்

தமிழ் சினிமா பிரபலங்கள் வழக்கமாக, இசைவிழா பார்ட்டி, 100வது நாள் விழா பார்ட்டி, என்றெல்லாம் இரவு விருந்துகளை நடத்துவார்கள்.. ஆனால், இப்போது போதை மருந்து நடமாட்டம் எதிரொலியாக அனைத்து இரவு விருந்துகளும் சினிமா பிரபலங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன..

அதுமட்டுமல்லாமல் பல பிரபலங்கள், தங்களுடைய செல்போன் நம்பரை மாற்றியிருக்கிறார்கள்... அத்துடன் தங்களது செல்போன் நம்பரை ஆஃப் செய்தும் வைத்திருக்கிறார்கள்.. மிக முக்கியமான நபர்கள் என்றால் மட்டும் போனில் பேசுகிறார்களாம்.

கென்யா பெண்மணி பகீர்

இந்நிலையில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கென்யா நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்..

அவர் சொல்லும்போது, "நான் பல உதவி இயக்குனர்களுக்கு கொக்கைன் விற்றிருக்கிறேன்.. பிரபல இயக்குனர்கள், தங்களது உதவி இயக்குனர்கள் மூலம் என்னிடம் கொகைன் வாங்கி செல்வார்கள்.. அதேபோல, நடிகர், நடிகைகளும் அவர்களது உதவியாளர்கள் மூலம் வாங்கி செல்வார்கள். ஆனால், எந்த நடிகர், நடிகைகளுக்கும் நான் நேரடியாக விற்றதில்லை.. புரோக்கர்கள் மூலமாகத்தான் விற்றுக் கொண்டிருக்கிறேன்" என்றெல்லாம் வாக்குமூலம் தந்துள்ளார்.

மூளையை தாக்கும் பொடி

அமெரிக்காவில் பிரபலமான கோகோ தாவரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் கோகைன் மருந்து. இந்த கோக்கைன் மருந்தினை பலவிதமாக நுகர்கிறார்கள்.. சிலர் பொடியை உள்ளங்கையில் வைத்து ரெண்டு முறை நாக்கில் தடவிக் கொள்கிறார்கள்.. சிலர், கொக்கைன் பவுடரை உதட்டுக்கு கீழே மடித்து வைத்து கொள்கிறார்கள்.. சிலர், சிகரெட்டில் உள்ளே வைத்து புகைக்கிறார்கள். சிலர், அந்த பொடியை கையில் வைத்து, அப்படியே நுகர்கிறார்கள்..

1 கிராம் விலை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து, 30 ஆயிரம் வரை 1 கிராம் விற்பனையாகிறது..
கொக்கைன் நேரடியாகவே மூளைக்கு சென்று, தாக்கக்கூடிய விஷமான போதை மருந்து என்பதால்தான், உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது.

மூளைக்கு கொகைன் சென்றதுமே ஒருவித மதமதப்பை ஏற்படுத்திவிடும்.. பசி என்பதும் தெரியாது.. பல நடிகைகள் ஒல்லியாக இருக்க இதுவும் காரணம்.. ஆனால், எந்த நடிகைகள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை..

தமிழக போலீஸ் அதிரடி

ஆனால், இந்த போதையை முற்றிலும் ஒழித்தே தீருவது என்று தமிழக போலீஸ் கங்கணம் கட்டிக்கொண்டு வலைவிரித்து, குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

எனவே, திரைத்துறையில் போதை பயன்பாடு உள்ளதா? அப்படியானால் யார் யார் பயன்படுத்துகிறார்கள்? என்பதை கண்டறிய பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+