யூட்யூபர் இர்பான் திருமண haldi பங்க்ஷன்..இவங்க எல்லாம் போயிருக்காங்க..கடைசியில் நடந்த ட்விஸ்ட்
சென்னை: யூட்யூப் மூலமாக பிரபலமான இர்பான் தன்னுடைய திருமணம் பற்றி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய திருமணத்திற்கு முந்தைய ஹல்டி ஃபங்ஷன் கொண்டாடப்பட்டு இருக்கிறது.
இந்த பங்க்ஷனில் சின்னத்திரை, வெள்ளித்திரை, youtube பிரபலங்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு தான் நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதில் அனைவருக்கும் ஃபேவரைட் சாப்பாடு என்பது ஆக இருந்து வருகிறது. அதை பற்றி ரிவ்யூ செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த இர்பான் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இர்பான் ஒரு உணவு விமர்சகராக இருந்தாலும் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு இடங்களுக்கும் சென்று அவர் உணவினை ரிவ்யூ செய்து வருவதை வைத்து ரசிகர்கள் பலர் மீம்ஸ்களில் அவருடைய புகைப்படத்தை வைத்து கலாய்த்து வருவார்கள். தொடர்ந்து இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வந்தாலும் அதைப்பற்றி இவர் கவலைப்படுவதில்லை.

தன்னைப் பார்த்து பலர் சந்தோஷப்படுவது தனக்கு மகிழ்ச்சிதான் என்று இவர் கூறியிருக்கிறார். அந்த வகையில் இப்ரான் பிறந்தது 1993 தானாம். இப்போது அவருக்கு 29 வயதாகிறது. அவருடைய தந்தை ஆட்டோ மெக்கானிக் மற்றும் தாய் ரேகா. அதுபோல அவருக்கு ஆஷிபா அசார் என்ற சகோதரியும் இருக்கிறாராம்.
இர்பான் ஸ்கூல் படித்தது எல்லாம் அமெரிக்காவில் தானாம். பிறகு சென்னை திரும்பி பிகாம் பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு ஜே.சசிகலா பானு உடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார். பிறகு தங்கள் இருவருக்கும் கருத்து ஒற்றுப் போகவில்லை என்று கூறி பிரிந்திருந்தனர். தற்போது தன்னுடைய திருமண நடைபெற உள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
தன்னுடைய திருமண அழைப்பிதழ் அச்சாகியதும் அதை நடிகர் கமல்ஹாசனுக்கு கொடுத்து அந்த வீடியோவையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார். அதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய ஹல்டி function புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார் அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் கவின், நடிகர்கள் அருண் மற்றும் அரவிந்த் அதுபோல பல youtube பிரபலங்களும் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர். வந்திருந்த பிரபலங்கள் இர்பான் கன்னத்தில் சந்தனம் வைத்து ஆட்டம் போட்டு வெளியான புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
இந்த புகைப்படங்களுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் அதிகமான ரசிகர்கள் கடைசி வரைக்கும் பொண்ணை கண்ணுல காட்டவே இல்லையே என்று கருத்து வெளியிட்டு ஆர்வத்தோடு காத்திருக்கிறார்களாம்
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications