என் மகளையும், என்னையும் அடிச்சிட்டாங்க.. ஹாஸ்பிடலில் நிற்கிறேன்! கதறி அழுத ஜி பி முத்து
சென்னை: சோசியல் மீடியாவில் பிரபலமான ஜி.பி. முத்து தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தனது மகளுடன் சேர்ந்து கதறி அழுதபடி பேசி இருக்கிறார் அவருடைய முகத்தில் காயங்கள் இருக்கிறது அவர் பேசிய வீடியோ இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜி பி முத்து வீடியோ
அந்த வீடியோவில் ஜி பி முத்து பேசும் போது", நாங்கள் இப்போது திருச்செந்தூர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். என்னை அடித்துவிட்டார்கள். என்னையும் என் மகளையும் கம்பியை வைத்து அடித்துவிட்டார்கள். என் மகளின் மார்பில் கூட அடித்திருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் இல்ல. எல்லா வீடியோ ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது.
எங்களை அப்படி அடித்தவர்கள் மீது கண்டிப்பாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீதிமன்றத்துக்குப் போகிறேன். இதை அப்படியே விட்டுவிட மாட்டேன். ஏற்கனவே நான் நீதிமன்றத்துக்குச் சென்று தீர்ப்பு வாங்கியிருக்கிறேன். அந்த தீர்ப்பை எப்படி மதிக்காமல் இருக்க முடியும்?
ஜி பி முத்து குடும்பத்தின் மீது தாக்குதல்
எங்கள் குடும்பத்தை முழுக்க ஊரைவிட்டு ஒதுக்கி வைப்போம் என்று மிரட்டுகிறார்கள். என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள். என்னை 'இஸ்லாமிய கைகூலி' என்று சொல்லி அவமதிக்கிறார்கள். என் குடும்பத்தையும், என் மகள்களையும் தரக்குறைவாக பேசுகிறார்கள்.
நாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எங்களை இப்படி தாக்குவது சரியா? எங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் தொடர்ந்து வரக்கூடாது.
நான் இதை கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு கொண்டு போவேன். என்ன நடந்தது என்பதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்," என்று ஜி.பி. முத்து அந்த வீடியோவில் கண்ணீருடன் பேசியுள்ளார்.
அவர் இப்படி பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அவரது குரலில் இருந்த பதற்றமும், அவர் கண்ணீருடன் பேசியதை பார்த்து எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டு வருகிறார்கள் ஆனால் என்ன பிரச்சனை என்பதை ஜி பி முத்து அந்த வீடியோவில் தெளிவாக சொல்லவில்லை.

பிக் பாஸ் பிரபலம்
ஜி.பி. முத்து முதலில் சமூக வலைதளங்களிலேயே பிரபலமானவர். தூத்துக்குடி வட்டார வழக்கில் பேசும் அவரது இயல்பான நடத்தை, வெகுளித்தனம் ஆகியவை அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின. இந்த பிரபல்யத்தாலேயே அவர் Bigg Boss Tamil நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு பெற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் விளையாடியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்தது
பலரும் அவரை டாப் 3 வரை செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், தனது குழந்தையின் உடல்நிலை காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், அவரிடம் மேலும் அன்பையும் உருவாக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும், ஜி.பி. முத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சில திரைப்படங்களிலும் சின்ன கேரக்டரில் நடித்தார்.
தற்போதைய நிலை
இப்போது அவர் வெளியிட்டுள்ள தாக்குதல் குறித்த வீடியோ, அவரது வாழ்க்கையில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை எடுக்கப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications