Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேல் சட்டையை கழற்றிக் கையில் பிடித்து அசத்திய கேபி.. ஓடி வந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சின்ன இடையும் அன்ன நடையுமாக எங்கோ பார்த்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் போஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ் கேபி.

கேபி எப்படிப்பட்ட போஸ் கொடுத்தாலும் ஓடி வந்து முதலில் அட்டென்டன்ஸ் போடுவது அவரது பரம ரசிகர்கள்தான்.

சும்மா சொல்லக் கூடாது.. வர வர கேபி போடும் போட்டோஸ் எல்லாம் வேற ரகமாகவே இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.

பெரிய்ய்ய..மனசுதான் கேபிக்கு

பெரிய்ய்ய..மனசுதான் கேபிக்கு

வயசு சிறுசா இருந்தாலும் மனசு பெருசு என்பதை கேபி போட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர். எங்களுக்காக இப்படி வந்தா நாங்க எப்படி வேலை பார்ப்பது என காலை வேளையில் இவர் வெளியிட்ட போட்டோவிற்கு கன்னாபின்னாவென்று கமெண்ட் போட்டு இன்ஸ்டாகிராமையே பீல் பண்ண வைத்திருக்கிறார்கள்.

மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கும். அதிலேயும் கேப்ரில்லாவுக்கு அவருடைய வசீகரிக்கும் புன்னகையும், எடுப்பான இடுப்பும் தான் அழகு என்று அவருடைய ரசிகர்கள் வகைவகையாக வர்ணித்து வருகின்றனர் .அதுவும் இப்போ காட்டுக்குள்ள மரங்களுக்கு இடையில் இவர் கலக்கலாக புன்னகையை சிந்தியபடி பலபேரை விழி அசைக்க மறக்கடித்து விட்டார் .

பிக்பாஸில் அன்பு நண்பர்கள்

பிக்பாஸில் அன்பு நண்பர்கள்

இவர் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதுவும் பிக்பாஸ் நான்காவது சீசனில் இவர் கலந்து கொண்டது இவருடைய ரசிகர்களின் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தினாலும் அவர்களின் ஆதரவோடு கடைசி வரைக்கும் இருந்தார். ஆனால் ரசிகர்கள் கொடுத்த ஆதரவினையும் புறந்தள்ளிவிட்டு தானாக அஞ்சு லட்சத்தை எடுத்துக்கொண்டு கேமை முடித்துவிட்டார்.

நழுவுற மீனு

நழுவுற மீனு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவரை பார்த்ததும் இவர் மீது இருந்த கோபத்தை மறந்து ரசிகர்கள் மீண்டும் இவருக்காக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். இவரை இம்ப்ரஸ் பண்ணும் கன்டஸ்டன்டாக இருந்தாலும் சரி , ரசிகர்களாக இருந்தாலும் சரி தன்னுடைய புன்னகையை மட்டுமே பதில் அளித்துவிட்டு கழுவுற தண்ணில நழுவுற மீனாக நழுவி விடுகிறார்.

பார்வை எங்கேயோ போகுது

பார்வை எங்கேயோ போகுது

இவர் என்னதான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்துவதில் அலுக்கவில்லை. அதனால்தான் தினமும் போஸ்ட் போட்டு ரசிகர்களை கவருகிறார். அதுவும் இப்போ எங்கோ பார்க்கும் பார்வையால் புன்னகையை சிந்தும் இவருடைய போட்டோவை பார்த்து நீங்க வேணா எங்கேயோ பார்த்துக்கோங்க. நாங்க உங்களை ரசிக்கிறோம் என்று அணுஅணுவாக ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+